ரசிகனான ஷாருக்கான்… ட்விட்டரில் நெகிழ்ச்சி!

by Rahini A, Apr 1, 2018, 12:32 PM IST

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தான் ரசிகனான கணம் பற்றி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.

உலக அளவில் சினிமா எடுத்தல் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், திரும்பவும் `பிலிம் ரோல்’ பயன்படுத்தி சினிமா எடுத்தல் என்பது ஐரோப்பிய திரை உலகில் பிரபலமாகி வருகின்றன. ஹாலிவுட்டைப் பொறுத்த வரையில், பல அறிவியல் புனைவு கதைகளை எடுத்த கிறிஸ்டோஃபர் நோலன், டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு பதில், பிலிம் ரோல் தொழில்நுட்பம் கொண்டே படம் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் மும்பையில், சினிமாவில் மீண்டும் பிலிம் ரோல் பயன்படுத்துவது குறித்து ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், இந்திய அளவில் கமல்ஹாசன், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடச்சத்திரங்கள் பங்கேற்றனர். மேலும் உலகின் முன்னணி இயக்குநரக்ளில் ஒருவரான நோலனும் பங்கேற்று உரையாற்றினார்.

இதையொட்டி ஷாருக்கான் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், `நான் ரசிகனான கணம். பிலிம் ரோல் தொழில்நுடப்த்தைப் பற்றி கிறிஸ்டோபர் நோலன் பேசியது மிகுந்த உற்சாகம் அளித்தது’ என்று நோலனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் செம வைரல்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ரசிகனான ஷாருக்கான்… ட்விட்டரில் நெகிழ்ச்சி! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை