விஜய் சேதுபதி நடிகைக்கு திருமணம்.. இப்போதே கல்யாண ஏற்பாட்டில் பிஸி..

by Chandru, Nov 18, 2020, 15:54 PM IST

விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்லரேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிஹாரரிகா. தெலுங்கில் ஒக மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொழில் அதிபர் சைதன்யா ஜொன்னலகடாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் உதய்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் டிசம்பரில் திருமணம் நடக்கிறது.

திருமண ஏற்பாடுகளை எந்த வித குறையும் இல்லாத வகையில் கவனிக்க ஐதராபாத்திலிருந்து இப்போதே நிஹாரிகா உதய்ப்பூர் புறப்பட்டு சென்றார். உதய்பூர் சென்றடைந்த உடன் அங்கிருந்து தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அங்குள்ள ஓபராய் ஓட்டலில் அவர் தங்கி இருக்கிறார். அங்குதான் டிசம்பர் 9ம் தேதி நடிகையின் திருமணம் நடக்க உள்ளது.

ஆடம்பரமாகத் திருமண ஏற்பாடுகள் நடந்தாலும் திருமண விழாவுக்குக் குறைந்த அளவிலான விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட உள்ளனர். கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி விழா நடக்க உள்ளது. கடந்த மாதம் நடிகை காஜல் அகர்வால் திருமணம் மும்பையில் நடந்தது. தனது பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை மணந்தார். அவருடன் தற்போது மாலத் தீவில் தேனிலவு அனுபவித்து வருகிறார்.

You'r reading விஜய் சேதுபதி நடிகைக்கு திருமணம்.. இப்போதே கல்யாண ஏற்பாட்டில் பிஸி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை