கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியது. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள். கீர்த்தி கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், டேனி. காக்டெய்ல் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. தியேட்டர் திறக்கப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படங்களும் ஒடிடியில் ரிலீஸ் ஆனது.
தியேட்டர்களை திறக்கக் கேட்டு தியேட்டர் அதிர்பர்கள் மத்திய மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்து வந்தனர். மத்திய அரசு அனுமதி வழங்கியும் ஒரு மாதகாலம் தமிழக அரசு அனுமதி வழங்காமலிருந்தது. ஒரு வழியாக நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி 50 சதவீத டிக் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
சந்தானம், நடித்த பிஸ்கோத், மற்றும் மரிஜுவானா, இரண்டம் குத்து ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்தாலும் கலெக்ஷன் போதுமானதாக இல்லை என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழலில் உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது.திரையரங்குகளை பராமரிக்கக் கூட வருமானம் இல்லாமலும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும் திரையரங்க உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
திறக்காத திரையரங்குகளுக்கும் ரூ.30,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் திரையுலகில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெரிய படங்கள் வெளியாகும் சூழல் உருவாகி தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி வழங்கும் வரை இத்தகைய போக்கு நீடிக்கும் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.