கலவரம் நடந்த இடத்தில் நடிகர் தொழுகை..

by Chandru, Nov 19, 2020, 11:11 AM IST

ஈஸ்வரன் படத்தை 40 நாட்களில் முற்றிலுமாக முடித்துக் கொடுத்தார், சிலம்பரசன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்தது. இதில் நிதி அகர்வால், நந்திதா சுவேதா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வரும் பொங்கல் தினத்தில் ஈஸ்வரன் திரைக்கு வருகிறது.அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடித்த வருகிறார். இதில் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறார்.

இப்படத்தின் ஒரு போஸ்டரை சிம்பு பகிர்ந்துள்ளார். சிதறிய கும்பைகள் நிறைந்த குழப்பமான சாலை. அங்கு ஒரு கலவரம் ஏற்பட்ட சூழல் போல் தெரிகிறது. எல்லோரும் அங்கும்மிங்கும் சிதறி ஓடிக்கொண்டிருக்க சிலம்பரசன் சாலையின் நடுவில் தொழுகை செய்வதைக் காணலாம். அவர் டிவிட்டரில் இப்படத்தை வெளியிட்டு இன்ஷால்லா என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 21 ஆம் தேதி வெளி வருகிறது.மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழுவினர் தற்போது பாண்டிச்சேரியில் படப் பிடிப்பு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்துக்காக ஒரு சேசிங் காட்சி படமானது, இது அஜித்தின் மங்காத்தா பட கார் துரத்தல் காட்சி போன்றது என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிம்புவின் ஈஸ்வரன் படம் ஜனவரியில் வெளியான பிறகு அடுத்து பிப்ரவரியில் மாநாடு திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனக ராஜ் படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படங்களில் சிம்பு நடிக்க உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை