கட்டிபிடிக்க வந்த அம்மாவை பார்த்து நடிகை ஓட்டம்..

by Chandru, Nov 20, 2020, 09:38 AM IST

கொரோனா வைரஸ் எல்லோரையும் தூரத்தில் இருக்க வைத்துள்ளது. வீட்டுக்குள்ளேயே ஒருவரைத் தொடாமல், கைகுலுக்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் . பொதுவெளியிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இதெல்லாம் கொரோனா வராமலிருக்க வழிகாட்டு நெறிமுறைகளாகும். பல நடிகர் நடிகை கொரோனாவால் பாதிக்கப்பட்டது நடந்துள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் தொடங்கி விஷால், ராஜசேகர் வரையிலும் ஐஸ்வர்யாராய் தொடங்கி தமன்னா, நிக்கி கல்ராணி வரையிலும் பலரும் பாதிக்கப்பட்டனர்.

சில நடிகைகள் மாதக் கணக்கில் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிமை கடைப்பிடித்தனர். ஸ்ருதிஹாசன் கொரோனா தொடங்கிய நேரத்திலிருந்தே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார், வீட்டிலேயே முடங்கி இருந்து செல்லப்பூனையுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். உடற்பயிற்சி இசை பயிற்சி செய்து வந்தார். ஒருநாளைக்கு முன்புதான் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கத் தயாரானார். அதுவும் கொரோனா கவச உடையும் வாங்கிக் கொண்டார்.

மற்றொரு நடிகையும் கடந்த 5 மாதத்துக்கும் மேலாக பெற்றோரை பிரிந்து தனிமையிலிருந்தார். விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததுடன் பல்வேறு தெலுங்கு படங்கள் மற்றும் இந்தி படங்களில் நடித்திருப்பவர் இலியானா. இவர் கொரோனா லாக்டவுன் தொடங்கியவுடன் வீட்டிலிருந்து வேறு வீட்டுக்குச் சென்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். 5 மாத்தத் துக்கும் மேலாக அவர் குடும்பத்தினர் யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருந்தார். 5 மாதத்துக்குப் பிறகு லடாக்கில் உள்ள பெற்றோரைச் சந்திக்க வந்தார்.

மகள் இலியானவை பார்த்ததும் அவரது தாய் அவரை கட்டித்தழுவ ஓடிவந்தார். ஆனால் இலியானா நோ நோ என்றபடி விலகி ஓடினார். இன்னும் தனிமைப்படுத்தலில்தான் இருக்கிறேன். கட்டியெல்லாம் பிடிக்கக் கூடாது என்றார். அருகில் இருந்தும் மகளை கட்டிப் பிடிக்க முடியாததால் அவரது தாய் சோகமானார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை