ரூ 500 கோடி நஷ்ட ஈடு கேட்ட ரஜினி வில்லன்..

by Chandru, Nov 20, 2020, 09:54 AM IST

ஷங்கர் இயக்க ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் இயக்கிய ராகவேந்திரா லாரன்ஸ் இப்படத்தை இந்தியிலும் இயக்கினார். சரத்குமார் ஏற்று நடித்த திருநங்கை வேடத்தை அக்ஷய்குமார் ஏற்றார். லக்‌ஷ்மி என்ற பெயரில் இப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியானது.

அக்‌ஷய்குமார் பற்றி இந்தியில் யூ டியூப் சேனல் நடத்தும் ரஷித் சித்திக் என்பவர் அவதூறாகச் செய்தி பரப்பினார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அக்‌ஷய் குமார் பெயரை இணைத்து வீடியோ செய்தி ஒளிபரப்பினார். சுஷாந்த் சிங் வளர்ச்சி பிடிக்காமல் அக்ஷய்குமார் தன்னைப் பற்றி பொய் செய்தி பரப்பி எனது பெயரையும் புகழையும் கெடுக்க முயற்சிக்கிறார். அவரால் நான் மன உளைச்சல் அடைந்திருக்கிறேன்.

இந்த பொய் செய்தியை வெளியிட்ட சித்திக் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மான நஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஏற்கனவே சித்திக் மகாராஷ்டிரா அமைச்சர் உத்தவ் தாக்ரே பற்றி அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்டவர் ஆவார். தொடர்ந்து இதே போல் போலி செய்திகளைப் பரப்பி தனது இணையதளத்துக்கு யூடியூபிற்கு சப்ஸ்கிரைபர்களை லட்சக்கணக்கில் கூட்டி இருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை