இசை அமைப்பாளரின் கிரையிங் அவுட்.. அழுகையை வைத்து பாடல்..

by Chandru, Nov 20, 2020, 12:00 PM IST

மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்துப் பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.'அசுரன்', 'சூரரைப் போற்று' படத்தின் பாடல்கள், பின்னணி இசையின் மூலம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்டிங் ஸ்டாராகியுள்ள ஜி.வி.பிரகாஷ், ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார்.

'கோல்ட் நைட்' ஆல்பத்தின் முதல் பாடலான 'ஹை அண்ட் ட்ரை'க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அனைத்து இசை செயலிகளிலும் ட்ரெண்ட்டிங் ஆனது.தற்போது 'கோல்ட் நைட்' ஆல்பத்தில் அடுத்த பாடலாக 'க்ரையிங் அவுட்' வெளியாகிறது. இது முழுக்க மனமுறிவைப் பற்றியது ஆகும். இந்த ஆல்பத்தில் பல மனமுறிவைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த 'க்ரையிங்' அவுட் பாடல் ஒரு நபரின் அழுகையைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷும் ஜூலியாவும் பாடியுள்ளார்கள். பாடல் வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். பிரிவு, அதன் மூலம் வரும் வலி ஆகியவைப் பற்றித் தான் இந்தப் பாடல் வரிகள் இருக்கும்.இந்தப் பாடலுக்கு ஒரு சுவாரசியமான ஒலி அமைப்பைக் கையாண்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்த ஒலி அமைப்பு இணையத்தில் பாராட்டைப் பெறத் தொடங்கியுள்ளது. தனது நடிப்பு, படங்களுக்கு இசை ஆகிய பணிகளுக்கு இடையே ஹாலிவுட் ஆல்பத்தையும் மெருகேற்றி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இன்னும் பல பாடல்கள் தொடர்ச்சியாக இந்த ஆல்பத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தவுள்ளது.

You'r reading இசை அமைப்பாளரின் கிரையிங் அவுட்.. அழுகையை வைத்து பாடல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை