ரவுடி பேபி நடிகையின் ரசிகர்கள் அப்செட்.. ஓரங்கட்டலாமா ? என கேள்வி..

by Chandru, Nov 20, 2020, 14:54 PM IST

நடிகை சாய் பல்லவி தமிழில் மாரி 2, என் ஜி கே என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக ஆட்டோ டிரைவர் வேடத்தில் சாய் பல்லவி நடித்தார். இப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பாடலுக்கு தனுஷுடன் டஃப் பைட் கொடுத்து நடனம் ஆடியிருந்தார் சாய் பல்லவி. நடனத்தைப் பிரபு தேவா அமைத்தார். இப்பாடல் யூடியூபில் வெளியாகி உடனடியாக ட்ரெண்டிங் ஆனது.

பின்னர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒடி முடிந்த பிறகும் ரவுடி பேபி பாடல் மட்டும் யூடியூபில் சாதனைகளை குவித்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் ஒன் பில்லியன் வியூஸ் பெற்று முதல் தென்னிந்தியப் பாடல் ஒன் பில்லியன் தாண்டியது என்ற பெருமை பெற்றது. இது குறித்து தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸின் ட்விட்டரில் ஒரு சிடிபியுடன் ரவுடிபேபி ஹிட்ஸ் 1 பில்லியன் வியூஸ் என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடப்பட்டது.

அதில் தனுஷ் படம் மட்டும் இடம் பெற்றிருந்தது. சாய்பல்லவி படம் காணப்படவில்லை அவரது படம் ஓரங்கட்டப் பட்டிருந்தது. அது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. ரவுடி பேபி பாடலில் தனுஷுடன் சாய் பல்லவி நடனம் ஆடியிருந்தார். ஆனால் அவர் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது மேலும் படத்தை இயக்கிய பாலாஜி மோகன், நடனம் அமைத்த பிரபு தேவா, இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா, மற்றும் ஒளிப்பதிவாளர் படங்களும் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இது தவறு எனச் சாய் பல்லவியின் ரசிகர்கள் வருத்தம் பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் சிலர் தனுஷ் ஆடிய ஆட்டத்துக்கு சாய்பல்லவி தந்த ஒத்துழைப்பும் பாடலின் ஹிட்டுக்கு காரணம் என்று ஆறுதலாக மெசேஜ் பகிர்ந்துள்ளனர்.

You'r reading ரவுடி பேபி நடிகையின் ரசிகர்கள் அப்செட்.. ஓரங்கட்டலாமா ? என கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை