நீச்சல் உடையில் நடிகை இதமான குளியல் வீடியோ..

by Chandru, Nov 21, 2020, 10:15 AM IST

நடிகை வேதிகா தமிழில் மதராஸி படத்தில் அறிமுகமானார். அடுத்து லாரன்ஸ் இயக்கிய முனி படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் வேதிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தே காணப்பட்டன. காளை, மலை மலை படங்களுக்குப் பிறகு பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்தார். இது வேதிகாவின் நடிப்பை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது. காஞ்சனா 3 படத்தில் மீண்டும் லாரன்ஸ் உடன் நடித்தார்.

கொரோனா ஊரடங்கில் வீட்டில் 6 மாதமாக முடங்கி இருந்தார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைத் தக்க வைத்து வந்தார். கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் விடுமுறை பயணமாக மாலத்தீவு புறப்பட்டுச் சென்றார் வேதிகா. அங்கு இயற்கை சூழலில் அமைந்திருக்கும் ஸ்பாவுக்கு சென்றார். நீச்சல் உடை அணிந்து வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பிய பாத் டப்பில் அமர்ந்து ஆனந்தமாகக் குளித்தார். அப்போது இதமான சாரல் மழையும் அவரை நனைத்தது.

இந்த ஹாட் பாத் டப், தாமரைகள் மலர்ந்திருக்கும் எழில் மிகுந்த தடாகத்தின் நடுவில் அமைந்திருக்கிறது. வேதிகாவின் குளியல் வீடியோவை ஸ்பெஷல் பறக்கும் கேமரா மூலம் பதிவு செய்து குளியல் காட்சியில் தொடங்கி அப்படியே ஃபோகஸ் செய்தபடி அவர் தங்கி இருக்கும் ஸ்பா இல்லத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் பறவை கோணத்தில் விரிவாகப் படமாக்கி இன்ஸ்டா கிராமில் வெளியிட்டிருக்கிறார். இது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் எதற்காகக் குளியல் காட்சியைக் கட் செய்தீர்கள் என்ற ரேஞ்ஜுக்கு ஜொல்லு விட்டிருக்கின்றனர்.

வேதிகா தற்போது தமிழில் வினோதன், ஜங்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வினோதன் பெரும்பகுதி முடிந்துவிட்டது. ஜங்கிள் படத்தின் படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார். வேதிகா ஆரம்பக் கட்டங்களில் கிளாமர் வேடங்களுக்கு ஒப்புக்கொள்ளாமலிருந்தார். இதனால் பல பட வாய்ப்புகள் கைநழுவியது. தற்போது கிளாமருக்கு துணிந்திருக்கிறார். அதற்கேற்ப இணைய தளத்தில் கிளாமர் படங்கள் வெளியிட்டு இயக்குனர்களுக்கு பகிர்கிறார். இது அவருக்கு அதிகப் பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று நம்புகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை