சாய்பல்லவி தெலுங்கு பாடலுக்கு ரவுடி பேபி மேட்ச் செய்த ரசிகர்கள்.. கண்டனமும், சேட்டையும் தொடர்கிறது..

by Chandru, Nov 21, 2020, 09:59 AM IST

நடிகை சாய் பல்லவி தனுஷுடன் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். நடனத்தை பிரபு தேவா அமைத்தார். இப்பாடல் யூடியூபில் வெளியாகி உடனடியாக ட்ரெண்டிங் ஆனது. பின்னர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒடி முடிந்த பிறகும் ரவுடி பேபி பாடல் மட்டும் யூடியூபில் சாதனைகளை குவித்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் ஒன் பில்லியன் வியூஸ் பெற்று முதல் தென்னிந்திய பாடல் ஒன் பில்லியன் தாண்டியது என்ற பெருமை பெற்றது.

இது குறித்து தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸின் ட்விட்டரில் ஒரு சிடிபியுடன் ரவுடிபேபி ஹிட்ஸ் 1 பில்லியன் வியூஸ் என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடப்பட்டது. அதில் தனுஷ் படம் சிபிடியி இடம் பெற்றிருந்தது. சாய் பல்லவி படம் காணப்படவில்லை. இது சாய் பல்லவியின் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்தது, ஒன் பில்லியன் சாதனை பாடலான ரவுடி பேபியில் தனுஷ் மட்டுமே இல்லை சாய் பல்லவிக்கும் பங்கு உள்ளது அவரது படத்தை சிபிடியில் வெளியிடாமல் எப்படி புறக்கணிக்கலாம் என்று கேட்டு தனுஷிடம் கேள்வி எழுப்பியதுடன் கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சையாக நெட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

தற்போது சாய் பல்லவியின் ரசிகர்கள் புது யுக்தியைக் கையாண்டு ரவுடிபேபியில் சாய் பல்லவியின் பாடலை ட்ரெண்டாக்கி வருகின்றனர். நானியும் சாய் பல்லவியும் தெலுங்கில் மிடில் கிளாஸ் அப்பாயி படத்தில் நானியுடன் அச்சு அசல் ரவுடி பேபி பாடல் போலவே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அந்த பாடலில் பாடல் வரிகளுக்கு பதிலாகச் சாய் பல்லவியின் ரவுடி பேபி பாடல் வரிகளை எடிட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். நானியும், சாய் பல்லவியும் ரவுடி பேபி பாடலுக்கு ஆடியதுபோலவே நடன அசைவுகள் மேட்ச் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது நெட்டில் வேகமாக பரவி வருகிறது.ரவுடி பேபி பாடலில் தனுஷுடன் சாய் பல்லவி நடனம் ஆடியிருந்தார். ஆனால் அவர் படம் சிபிடியில் கொண்டாட்டத்தில் புறக் கணிக்கப்பட்டிருக்கிறது மேலும் படத்தை இயக்கிய பாலாஜி மோகன், நடனம் அமைத்த பிரபு தேவா, இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா, மற்றும் ஒளிப்பதிவாளர் படங்களும் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இது தவறு எனச் சாய் பல்லவியின் ரசிகர்கள் கண்டனம் பகிர்ந்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை