காமெடி நடிகை வீட்டில் போதை மருந்து அதிகாரிகள் சோதனை..

by Chandru, Nov 21, 2020, 16:10 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு திடீரென்று அவரது தந்தை கொடுத்த புகாரால் போதை மருந்து வழக்காக மாறியது. சுஷாந்தை அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்துக்கு அடிமையாக்கி அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த புகாரில் கூறியிருந்தார் சுஷாந்த் தந்தை. இதையடுத்து ரியா மீது போதை மருந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் போன்றவர்களிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்தி காமெடி நடிகை வீட்டில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.மும்பையில் உள்ள நகைச்சுவை நடிகை பாரதி சிங் மற்றும் கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியாவின் மும்பையில் உள்ள வீட்டில் என்சிபி சோதனை நடத்தியது.ஜூன் மாதத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் விசாரணை தொடர்பாக நகைச்சுவை நடிகை பாரதி சிங் வீட்டில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) சோதனை நடத்தியது. இதில் போதைப் பொருள் சிக்கியதா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. போதை வழக்கில் சிக்கி சிறை சென்ற ரியா சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார். அவர் மீண்டும் படங்களில் நடிக்க முயன்று வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை