கபில்தேவின் ஹீரோவான தமிழக வீரர்!

by Loganathan, Nov 21, 2020, 16:23 PM IST

ஐபிஎல் தொடரின் 13 ழது சீசன் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் இறுதியாக ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தொடர்ச்சியாக இரண்டாவது முறை தொடரை வென்று அசத்தியது ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.நடந்து முடிந்த இந்த சீசனில் பல இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்தனர். அந்த வகையில் தனது "யார்க்கர்" பந்து வீச்சால் அனைவரையும் அசரடித்தவர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன்.

வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஓவரின் ஆறு பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் பெற்றவர். இவர் இந்த 13 வது சீசனில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதன்முதலில் நடராஜன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக 3 கோடி ரூபாய் ஏலத்தில் 2017 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த சீசனில் இவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதனால் அடுத்த ஆண்டு பஞ்சாப் அணி அவரை கழட்டிவிட்டது.

பின்னர் இவர் ஹைதராபாத் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி பவுலாராக அணியில் இடம்பெற்று இருந்தார். ஒருவழியாக 2020 ம் ஆண்டு நடந்த 13 வது சீசனில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நடராஜன் அபாரமாகப் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்குப் பரிசாக இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணிக்காக ஆட உள்ளார்.

இவரின் இந்த அசாத்தியமான யார்க்கர் பந்து வீச்சு திறனை பலரும் பாராட்டிய நிலையில், இந்திய அணிக்காக முதல் உலக கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் கபில்தேவ், அவர்களும் நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இவர் இந்துஸ்தான் செய்திக்கு அளித்த பேட்டியில் " இந்த ஐபிஎல் சீசனில் எனது கதாநாயகன் நடராஜன் தான். இளம் வீரரான இவர் பயமில்லாமல் அருமையாக யார்க்கர் பந்து வீசுகிறார். கடந்த 100 வருடங்களில் இவர் போல் அருமையான யார்க்கர் பந்தை யாரும் வீசவில்லை" எனப் பெருமை கொள்கிறார் கபில்.

இந்த 13 வது சீசனில் நடராஜன் மிக முக்கியமான தருணங்களில் மிக முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் குறிப்பிடத்தக்கது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் வீராத் கோலி மற்றும் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ்ம் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி தகுதி சுற்றுக்குள் ஹைதராபாத் அணி நுழைய உதவி புரிந்தார் நடராஜன்.

வாழ்த்துக்கள் நட்டு.

You'r reading கபில்தேவின் ஹீரோவான தமிழக வீரர்! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை