புட்ட பொம்மா பாடல் புகழ் ஹீரோயினுக்கு கொரோனா டெஸ்ட்.. படப்பிடிப்பு ரத்து..

by Chandru, Nov 22, 2020, 10:07 AM IST

கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திம்பிக் கொண்டிருந்தாலும் வைரஸ் தாக்குதல் ஒழிந்தபாடில்லை. சமீபத்தில் நடிகர் சிரஞ்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியானது இதை அவரே உறுதியும் செய்திருந்தார். பின்னர் இரண்டு நாட்களில் தனக்கு கொரோனா தொற்று இல்லை. இதற்கான முதல் பரிசோதனை முடிவுகளை முடிவை தவறாக காட்டியது பிறகு முக்கியமான 3 டெஸ்ட் எடுத்தபோது அதில் தொற்று இல்லை, உடல் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், விஷால். ராஜமவுலி, டாக்டர் ராஜசேகர், ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, தமன்னா போன்ற பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன் இந்தி நடிகர் சல்மான் கானின் கார் டிரைவருக்கும் மற்றும் வேலையாட்கள் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து சல்மான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டார். தமிழில் முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இப்படத்துக்கு பிறகு இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார். அல வைகுந்தபுர முலு தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா.. பாடல் மூலம் பூஜா ரசிகர்களால் கவரப்பட்டார். தெலுங்கு, இந்தி படங்கலுக்காக என பல ஊர்களுக்கு பிரயாணம் மேற்கொண்டு நடித்து வருகிறார் பூஜா. தற்போது மோஸ்ட்யெலி ஜிபள் பேச்சுலர் படத்தில் நடித்த வருகிறார். இந்நிலையில் பூஜாவுக்கு இருமல், சளி ஏற்பட்டது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் பூஜாவுக்கு இருமல், சளி ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதன் முடிவில் புஜாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் இருமல், சளி தொல்லையிலிருந்து பூஜா குணம் ஆனபிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடர்கின்றனர். இப்படத்தை முடித்த பிறகு பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார் பூஜா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை