மீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..

by Chandru, Nov 22, 2020, 10:09 AM IST

நடிகைகள் சிலர் சில படங்களில் நடிக்கின்றனர். பின்னர் திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். நடிகை ஷாலினி அப்படித் தான் சிறு வயது முதல் நடித்தாலும் ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அஜீத்குமாருடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன ஷாலினி கடந்த 20 வருடமாக குடும்பத்தின் மீதே கவனம் செலுத்தி வந்தார். தற்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டனர். இதற்கிடையில் ஷாலினிக்கு படங்களில் நடிக்க எவ்வளவோ வாய்ப்பு வந்தபோதும் ஷாலினி எதையும் ஏற்கவில்லை. 20 வருடம் கழித்து ஷாலினி மீண்டும் நடிக்க வருவதாக தகவல் பரவி வருகிறது.

ஷாலினிக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து வெப் சீரிஸில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. இது பாப்புளர் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதில் நடிக்க ஷாலினி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஷாலினி குழந்தை நடசத்திரமாக ஆனந்த கும்மி, ஓசை, பந்தம், பிள்ளை நிலா, ஆயிரம் கண்ணுடையாள் போன்ற தமிழ் மற்றும் மலையாளம் என சுமார் 50 படங்களில் நடித்திருக்கிறார். பிறகு ஹீரோயினாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, ப்ரியாத வரம் வேண்டும், அமர்க்களம் என சுமார் 10 படங்களில் நடித்தார். அஜீத்தை பொறுத்தவரை வருடத்துக்கு ஒரு படம் நடிக்கிறார்.

விஸ்வாசம் முடித்து இடைவெளிக்கு பிறகு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். தற்போது வலிமை படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கியது. சமீபத்தில் மோட்டர் சைக்கிளில் வந்து வில்லன்களிடம் மோதும் சண்டை காட்சியில் நடித்தபோது மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அஜித்துக்கு காலில் அடிபட்டது. சிறிது நேர்ம் ஓய்வு எடுத்துக் கொண்டு காட்சியை முடித்து விட்டு சென்னை திரும்பினார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை