டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகையை படம் பிடித்த தந்தை..

by Chandru, Nov 22, 2020, 10:32 AM IST

நடிகைகள் தங்களது கவர்ச்சி மற்றும் டூ பீஸ் நீச்சல் உடை படங்கள் டப் லெஸ் படங்களை அவ்வப்போது வெளியிடுகின்றனர். இதற்காக தங்களுக்கென் ஸ்பெஷல் போட்டோகிராபர்களை உடன் வைத்திருப்பதுண்டு. நடிகை இலியானா தனது கவர்ச்சி படங்களை தன்னுடைய ஃபாய் பிரண்ட் ஆண்ட்ரு நியூபோன் என்பவரை வைத்து அந்தரங்க, படங்கள் வீடியோக்களை படமாக்கி வெளியிட்டார். ஆண்ட்ரு தொழில்ரீதியாக ஒரு புகைப்பட நிபுணர் ஆவார். அதேபோல் பூனம் பாண்டே, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நடிகைகள் தங்களது அந்தரங்க படங்களை புகைப்படம் எடுக்க பிரத்யேகமாக புகைப்பட கலைஞர்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றனர். ஆனால் ஒரு நடிகை தனது தந்தையையே கவர்ச்சி படங்களை எடுக்க வைத்து அதை நெட்டிலும் பதிவிட்டிருக்கிறார். சமீபகாலமாக நடிகைகள் விடுமுறை கால பயணம் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

நடிகை காஜல் அகர்வால் தனது தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு கணவருடன் பலவித போஸ்களில் படங்கள் எடுத்தார். பிறகு கடலுக்கு அடியில் நீந்தும் சாகசங்களையும் செய்து அதன் புகைப்படங்களையும் ரசிகர்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து நடிகை வேதிகா மாலத்தீவிற்கு விடு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு இயற்கை எழில் சூழ அமைந்துள்ள ஸ்பாவுக்கு சென்றவர் தாமரை தடாகத்துக்கு நடுவே அமைந்துள்ள வெது வெதுப்பான நீர் நிரம்பிய பாத் டப்பில் நீச்சல் உடையில் அமர்ந்தபடி குளித்தார். அந்த காட்சியை ஸ்பெஷல் பறக்கும் கேமரா மூலமாக படமாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அது வைரலானது. தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் விடுமுறை பயணமாக குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றார்.

அங்கு கடலில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நீச்சல் போட்டவர் பின்னர் எந்திர படகில் ஏறி கடலில் ஜாலியாக சுற்றி வந்தார். படகில் அமர்ந்த படியும் , படுத்தபடியுமாக பலவித கோணங்களில் புகைப்படம் எடுத்தார். அந்த படங்களை நெட்டில் வெளியிட்டார். ரகுலின் கவர்ச்சி படங்களை எடுத்தது அவரது தந்தைதான். இதுகுறித்து ரகுல் கூறும் போது, "டாடி தி கிரேட். எனது அழகான இந்த புன்னகை தவழும் தருணத்தை எனது தந்தைதான் படம் எடுத்தார்” என்று குறிப்பிட்டார். ரகுல் ப்ரீத் தற்போது அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் மே டே படத்தில் பைலட்டாக நடிக்க உள்ளார். இதில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அமிதாப்புடன் நடிப்பது எனது கனவு நனவானது போன்ற விஷயம் என ரகுல் தெரிவித்தார். இது தவிர நிதின் ஜோடியாக செக் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார் ரகுல்.

You'r reading டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகையை படம் பிடித்த தந்தை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை