10 வருட காதலியை காத்திருந்து மணந்த மூக்குத்தி அம்மன் பட பிரபலம்..

by Chandru, Nov 22, 2020, 10:36 AM IST

சில சினிமாக்களில் காதல் ஜோடிகள் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்கையில் எதையாவது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்வார்கள். காதலின் வேகம் அவர்களை சாதிக்க தூண்டும் கடைசியில் திருமணம் செய்துக் கொள்வார்கள். நிஜத்திலும் அப்படியொரு காதல் கோலிவுட்டில் நடந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா ஆர்.கே. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியதுடன் தற்போது கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார்.

செல்வாவும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர். சினிமாவில் எதையாவது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காதலர்களாகவே காத்திருந்திருந்தார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக செல்வா ஒரு இடத்தை எட்டிய பிறகு திருமணம் செய்வது குறித்து இரு வீட்டாரிடமும் செல்வா-அனிதா இருவரும் சம்மதம் பெற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். லட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து கரம்பிடித்துக் கொண்ட தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை