சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் சலசலப்பு.. போலீஸ் பாதுகாப்பு: புதிய தலைவர் யார்?

by Chandru, Nov 22, 2020, 12:19 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் இன்று நடக்கும் என தேர்தல் அதிகாரி நீதியரசர் ஜெயச்சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை அடையாறு பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியில் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303. மொத்த முள்ள 27 பொறுப்புகளுக்கு112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு என்.ராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி, டி.ராஜேந்தர், பி.எல். தேனப்பன் ஆகிய மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அணியின் சார்பில் போட்டியிடும் சிவசக்தி பாண்டியன். ஆர்.கே.சுரேஷ், பிடி.செல்வகுமார், முருகன் ஆகியோரும் சுயேச்சையாக சிங்காரவடி வேலன், கதிரேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திர போஸ் இடையில் கணிக்க முடியாத போட்டியாக உள்ளது. பொருளாளர் பதவிக்கு அணியின் சார்பில் போட்டியிடும் கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின், ஜே.எஸ்.கே. சதிஷ் குமார் போட்டியிடுகின்றனர். மூன்று அணியினரும் தேர்தல் பணியில் தீவிரமாக இருந்து வெற்றி பெற்றால் என்னென்ன நன்மைகள் சங்க உறுப்பினர்களுக்கு செய்வோம் என்பதை ஏற்கனவே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை23.11.2020 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க தேர்தலையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட வந்தவர்களுக்கு பணம், தங்க நாணயம் கொடுத்ததாக சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது.

துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அணியின் சார்பில் போட்டியிடும் சிவசக்தி பாண்டியன், ஆர்.கே. சுரேஷ், பி.டி.செல்வகுமார், அடிதடி முருகன் இவர்களை காட்டிலும் சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவடி வேலன், கதிரேசன் இருவரும் கடும் போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் பரபரப்பாக காணப்படுகின்றனர். கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திரபோஸ் இடையில் கணிக்க முடியாத போட்டியாக உள்ளது. பொருளார் பதவிக்கு அணியின் சார்பில் போட்டியிடும் கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் இருவருக்குமான போட்டி சந்திரபிரகாஷ் ஜெயின், சுயேச்சையாக போட்டியிடும் ஜே எஸ். கே சதிஷ்குமாருக்குமான போட்டியாக மாறியுள்ளது. நலம் காக்கும் அணி சார்பில் நேற்றைய தினம் வாக்களர்ளுக்கு வழங்கப்பட இருந்தாக தகவல் வர அதை எதிர் அணி காவல்துறையில் புகார் செய்து தடுத்ததாக தெரிகிறது.

ஒட்டு மொத்தமாக ஒரே அணி வெற்றியை அடையுமா என்பது சந்தேகம். இரு அணியிலும் கலந்து நிர்வாகிகள் தேர்வாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுயேச்சைகள் ஆதிக்கம் இருப்பதற்கு காரணம் பண புழக்கம் காரணம் என்கின்றனர். அரசியல் கட்சிகள் தேர்தலில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு 2000ம் ரூபாய் வரை இந்தியாவில் வழங்கியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 20,000 ம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாகவும் பேசப்படுகிறது. 60% வாக்காளர்கள் அன்பளிப்பு, கரன்சிகளை வேண்டாம் என கூறியிருக்கிறார்களாம். இன்று நடைபெற்றுவரும் தேர்தலுக்காக தேர்தலில் போட்டியிடுபவர்கள் தரப்பில் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறதாம். தேர்தல் களேபரம் இன்று மாலையுடன் ஒயந்தபின் நாளைகாலை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுபினர்கள் யார் யார் என்பது நாளை தெரியும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை