நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் பாகம் 2 வெளிவர வாய்ப்புள்ளதாம்..! ஆர் ஜே பாலாஜி தகவல்..

by Logeswari, Nov 22, 2020, 17:22 PM IST

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா சூழ்ந்ததால் திரையரங்குகள், சினிமா படப்பிடிப்பு ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தனர். சூர்யா நடித்த சூரரை போற்று, விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதுபோல ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புதிய நடிப்பில், மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இது ஹாட்ஸ்டார் டிஸ்னி பிளஸ் என்கிற ஓடிடி தளத்தில் வெளி வந்தது. நயன்தாராவின் அம்மன் வேடம் மற்றும் கதையின் எதார்த்தம் ஆகியவை மக்களை கவர்ந்தது. திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு அடைந்தது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் யாவும் சோசியல் மெசேஜ் கொண்ட படமாக இருக்கும்.

அதுபோல மூக்குத்தி அம்மனும் மக்களை ஏமாற்றும் போலி சாமியார்களின் சுயநலத்தை தைரியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முகநூலில் ஆர் ஜே பாலாஜி முக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் இரண்டாம் பாகம் வெளிவருகிறதா?? என்று கேள்வி எழுப்பியதற்கு பாலாஜி சினிமாவில் பலர் முதலாம் பாகம் நன்றாக இல்லை என்றாலும் இரண்டாம் பாகம் எடுக்கின்றனர். ஆனால் மூக்குத்தி அம்மன் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வெளியாகும் மற்றும் முதலாம் பாகத்தில் மறைந்திருந்த ரகசியங்கள் யாவும் இரண்டாம் பாகத்தில் போட்டு உடைப்போம் என்று தில்லாக கூறியுள்ளார். மக்களும் நயன்தாராவை இரண்டாவது முறை அம்மன் வேடத்தில் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை