45 வயதிலும் 25 வயது நடிகை போல் கட்டுமஸ்து.. ஜின்மனாஸ்டிக் ஹீரோயின்..

by Chandru, Nov 23, 2020, 10:08 AM IST

தமிழில் நாகார்ஜூனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். இவர் 1994ம் ஆண்டின் உலக அழகியாக தேர்வானர். பின்னர் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி.. பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடிய பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனது உடற்தகுதி மற்றும் ஒர்க் அவுட் திறனை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டார். வயது என்பது ஒரு நம்பர்தான் என்பதை நிரூபித்து வருகிறார்.

சுஷ்மிதா தனது உடற்கட்டை 25வயது இளம் பெண் போல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வகையில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறார். அந்த இளமை வலிமையை அதிகரிக்க உழைக்கிறார். உடற்பயிற்சி கூடத்தில் நடிகை சுஷ்மிதா ஜிம்னாஸ்டிக் பாணியில் தலைகீழாகத் தொங்கி கால்களைக் காற்றில் உயர்த்தி தான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதை நிரூபித்தார்.

வீடியோவைப் பகிர்ந்த அவர், "ஒரு பெருமை 45வயதில் இருக்கிறேன். 20 வருடங்களுக்கு மேலாக உடல் மற்றும் மன வலிமையைப் பெற ரசிகர்கள் மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறீர்கள் என்பது எனக்கு அடிக்கடி நினைவூட்டுகிறது, ஒரு பெரிய ஆசீர்வாத வாழ்க்கை கிடைத்தது. அது முடிவில்லாமல் தொடர்கிறது. அதன் ஆற்றல் என்னை வழிநடத்துகிறது. உங்கள் நிபந்தனையற்ற அன்பும் கருணையும் என் வாழ்க்கையை வளமாக்குகிறது, மேலும் ஒரு சிறந்த மனிதராக எனக்கு அதிகாரம் அளிக்கிறது.

நன்மையைப் பரப்பிக் கொண்டே இருங்கள். எனக்கும் இந்த உலகத்துக்கும் உங்களைப் போன்றவர்கள் தேவை. நான் உங்களை நேசிக்கிறேன் என்றார் சுஷ்மிதா.வேலை முன்னணியில், சுஷ்மிதா சென் கடைசியாக 2010ல் படத்தில் நடித்தார். பிறகு சமீபத்தில் அவர் ஆர்யா என்ற வெப் தொடரில் மீண்டும் நடிக்க வந்தார். இது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் வெளியாகி வருகிறது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்