நடிகை கங்கனா என்றதும் அவரது சர்ச்சைகள் தான் ஞாபகத்துக்கு வரும். சுஷாந்த் சிங் மரணத்திற்கு வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன் பாலிவுட்டில் போதைப்பொருள் உபயோகம் உள்ளது என்றார். மேலும் கரண் போன்றவர்களைக் கடுமையாக விமர்சித்தார். பிறகு மகராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனாவுடன் மோதல் போக்கு கடைப்பிடித்தார்.
மும்பை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் போல் உள்ளது என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். இதில் கோபம் அடைந்த சிவசேனா கட்சியினர் கங்கனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அவரது வீட்டில் மாநகராட்சி விதிமுறைகளுக்கு மீறி கட்டிடம் கட்டியிருப்பதாகக் கூறு அதிகாரிகள் அந்த கட்டிடத்தை இடித்தனர். மேலும் போதை மருந்து பயன்படுத்தியதாக அவரிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ள முயன்றனர். இதையறிந்து அவர் மும்பையிலிருந்து மனாலி சென்று தங்கினார்.
இந்நிலையில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசிடம் கமாண்டோ பாதுகாப்பு கேட்டுப் பெற்றார். ஆனாலும் சர்ச்சை கருத்து கூறுவதை நிறுத்தவில்லை. மத உணர்வைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கங்கனா மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் கங்கனா மற்றும் அவரது தங்கை ரங்கோலி மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராககேட்டு போலீஸ் 3 முறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால் ஆஜராகவில்லை. இந்நிலையில் கங்கனா தனது வலைத்தள பக்கத்தில் சிறுவன் ஒருவனுக்கு உதட்டு முத்தம் தரும் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமான மெசேஜ் எழுதி உள்ளார். இந்த சிறுவன் பெயர் பிரித்வி. கங்கனாவின் சகோதர உறவின் மகன் ஆவார்.
கங்கானா கூறும்போது, படப்பிடிப்புக்காக நான் புறப்படுவதாகச் சொன்னபோது போகவேண்டாம் இங்கேயே இருங்கள் என்றான் பிரித்வி. அவனிடம் வேலைக்குச் செல்ல வேண்டிய காரணத்தை விளக்கினேன். அதைப் புரிந்து கொண்ட அவன் திடீரென்று என் மடி மீது அமர்ந்து கொண்டு, நீங்கள் போங்கள் அதற்கு முன் நான் சிறிது நேரம் உங்கள் மடியில் அமர்ந்துகொள்கிறேன் என்றான். அவனது முகம் என் கண்களை விட்டு அகல வில்லை. இன்னும் அந்த காட்சி என் கண்களில் கண்ணீரை நிறுத்தவில்லை என்றார் கங்கனா.
கங்கனா தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. அங்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.