சாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..

by Chandru, Nov 23, 2020, 10:27 AM IST

நடிகைகளில் சிலர் ஆன்மிகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். சிலர் பக்தி முத்தி சாமியார் ஆகிவிடுகின்றனர். நாடோடி தென்றல் நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் சென்று அங்கேயே தங்கி சாமியார் ஆகி விட்டார். அதேபோல் இன்னொரு நடிகை முஸ்லிம் மத சாமியார் ஆகி இருக்கிறார்.ஈ படத்தில் நடித்ததுடன் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சனா கான். பிறகு இந்தியில் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் ஷோவிலும் கலந்துகொண்டார்.

பின்னர் இந்தி படங்களில் நடித்தார். மீண்டும் பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சனாவின் தந்தை மலையாள முஸ்லிம் ஆவார். நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவருடன் சனா கான் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்ந்து வந்தார். அதை உறுதியும் செய்தார். பிறகு இருவரும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரேக் அப் செய்துக் கொண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சனாகான் அதிர்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், இனி சினிமாவில் நடிக்கமாட்டேன். மனிதாபிமான சேவையில் படைப்பு கடவுளின் சேவையிலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன் என்றார். அத்துடன் வெள்ளை உடை அணிந்து முஸ்லிம் பென் சாமியாராக மாறினார். இந்நிலையில் சமீபத்தில் குஜராத்தைத் தலைமை இடமாகக் கொண்ட மடத்திலிருக்கும் முப்தி அனாஸ் என்ற சாமியாரை சனா கான் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். இந்த திருமணம் நெட்டில் வைரலாக பரவி வருகிறது. சனா -அனாஸ் ஜோடி எளிய சுயவிவர திருமணத்தை நடத்தியது. அவர்களது திருமணத்தின் வீடியோக்களும் படங்களும் இணையத்தில் வைரலாகி விட்டன.

33 வயதான நடிகையின் பல வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன, அதில் தம்பதியினர் கையில் படிக்கட்டுக்குக் கீழே நடந்து செல்லும் படமும் இடம்பெற்றுள்ளது. சனா ஒரு வெள்ளை திருமண கவுன் அணிந்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது கணவர் வெள்ளை பாரம்பரிய உடையை அணிந்துள்ளார். அவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து 'நிக்கா முபாரக்' என்று எழுதப்பட்ட சாக்லேட் கேக்கை வெட்டினர்.திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த ரஞ்சிதா, சனா கான் என்ற 2 நடிகைகளை ஆன்மிக உலகுக்குத் தாரை வார்த்து விட்டது திரையுலகுக்கு ஒருவகையில் இழப்பு என்று ரசிகர்கள் கமெண்ட் பகிர்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை