தம்பிக்கு ஜோடியாக நடித்த நடிகை அண்ணனுக்கு ஜோடி..

by Chandru, Nov 23, 2020, 10:38 AM IST

நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். நடிகை ஸ்ரேயா ரஜினிக்கும் ஜோடியாக நடித்தார் ரஜினியின் மாப்பிள்ளை தனுஷுக்கும் நடிக்கிறார். அதேபோல் நயன்தாராவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் தனுஷுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதேசமயம் விஷால், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு எனப் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனன் ஒரு படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்தார். அத்துடன் அவரது ஹீரோயின் அந்தஸ்து டல்லடித்து விட்டது. அடுத்தடுத்த அவரை தங்கை வேடங்களுக்கே அழைக்கின்றனர். அதிலிருந்து வெளியில் வரப் போராடிக்கொண்டிருக்கிறார்.நடிகை ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம் ரேட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது புஷ்பா என்ற படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. தமிழில் நடிப்பது பற்றி ஏற்கனவே ராஷ்மிகா மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுவயதில் எனது தந்தை தமிழ்ப் படங்களைத் தான் தியேட்டருக்கு அழைத்துச் சென்று காட்டுவார். அப்போது முதலே நடிகையானால் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது தற்போது நிறைவேறுகிறது என்று தெரிவித்திருந்தார். சுல்தான் படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா அடுத்து கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் ஜோடி சேர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதையடுத்து பாண்டி ராஜ் படம். கவுதம் மேனன் படம், வெற்றிமாறன் படம் என வரிசையாகப் படங்களில் நடிக்க சூர்யா ஒப்புகொண்டிருக்கிறார். இதற்காக பிரத்யேகமாக ஹேர் ஸ்டை வைத்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா நடிப்பார் என்று தெரிகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது. ராஷ்மிகா தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, மற்றும் சர்வானந்த் ஜோடியாக புதிய படம் என் 2 படங்களில் நடித்து வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை