ஒரே தீவில் குவியும் ஹீரோயின்கள் கூட்டம்.. கடலில் குதித்த மற்றொரு பிரபல நடிகை..

by Chandru, Nov 23, 2020, 13:46 PM IST

கொரோனா தொற்று ஊரடங்கு திரையுலக நட்சத்திரங்களை வீட்டில் முடக்கி போட்டிருந்தது. 6 மாதம் வீட்டில் சமையல். உடற் பயிற்சி யோகா என்று பொழுதை கழித்தனர். காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் தனது 2 வருட பாய்ஃபிரண்டை திருமணம் செய்துக்கொண்டார், தமன்னா, நிக்கி கல்ராணி. ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா மற்றும் விஷால், ராஜசேகர் போன்ற நடிகைகள் மற்றும் நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதித்து சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். கொரோனா தளர்வு அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. வீட்டுக்குள் முடங்கி இருந்த நடிகைகள் கூட்டிலிருந்து பறந்த பறவைகள் போல் ஒவ்வொருவரும் விடுமுறை பயணம் புறப்பட்டு விட்டனர். ஏற்கனவே காஜல் அகர்வால் தனது தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு கணவருடன் சுற்றி திரிந்தும் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்தும் படங்களை நெட்டில் வெளியிட்டு கவர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து நடிகை வேதிகா மாலத்தீவு சென்றார். அங்கு ஸ்பாவிற்கு சென்று வெது வெதுப்பான நீர் நிரம்பிய பாத்டப்பில் குளித்து அந்த வீடியோவை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் தனது குடும்பத் துடன் மாலத்தீவு சென்றார். அங்கு நீச்சல் உடை அணிந்து அவர் அளித்த போஸ்களை அவரது தந்தை எடுத்து தர அதை ரகுல் தனது இணைய தள பக்கத்தில் பகிர்ந்தார். அதேபோல் பிரணிதா சுபாஷ் மாலத்திவிலிருந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார். இவர்களைத் தொடர்ந்து தற்போது செல்ஃபி புள்ள நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவுக்கு விடுமுறை பயணமாக சென்றிருக்கிறார். சமந்தா தனது மாலத்தீவு பயணத்தின் படங்களை வெளியிட்டார். அவர் தன்னைப் பற்றிய ஒரு படத்தை வெளியிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது. அனைவருமே ஸ்கூபா உடை அணிந்து கடலுக்குள் குதித்து நீந்தினர். கடலுக்குள் ... நான் இறுதியாக குதித்து நீந்தினேன்" என்றார். 'சூப்பர் டீலக்ஸ்' நடிகை சமந்தா முந்தைய நாள், தான் தங்கி இருக்கும் ரிசார்ட்டில் உள்ள தெளிவான நீரின் காட்சியை ரசிக்கும் ஒரு அழகான படத்தை வெளியிட்டார். சமந்தா கடைசியாக 'மஜிலி', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஓ! பேபி ' படங்களில் நடித்திருந்தார். அடுத்து விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் நடிக்க உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை