கணவனை வெளிநாட்டில் விட்டு வாய்ப்பு தேடி திரும்பிய நடிகை..

by Chandru, Nov 24, 2020, 12:56 PM IST

நடிகைகள் ஒரு சிலர் திருமணத்துக்கு பிறகு வெளிநாடுகளில் செட்டில் ஆகின்றனர். ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யா காதலர் ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் குடியேறினார். மீண்டும் அவர் படங்களில் நடிக்க வரவில்லை. மதராஸ பட்டணம் படத்தில் நடித்த எமி ஜாக்ஸன். கவர்ச்சிக்கு துணிந்து ஹீரோயின் வேடங்களில் நடித்தார். விஜய், தனுஷ் படங்களில் நடித்தவர் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அந்த படம் காலதாமதமாக வெளியானது. இதற்கிடையில் 2.0 படம் வெளியானால் தனது சம்பளத்தை உயர்த்தலாம் என்ற எண்ணத்தில் இருந்த எமிக்கு அந்த எண்ணம் ஈடேறவில்லை. பின்னர் லண்டன் புறப்பட்டு சென்றவர் தனது பாய்ஃபிரண்ட் ஜார்ஜ் பனையியோட்டுடன் நெருக்கம் அதிகமாகி கர்ப்பம் அடைந்தார். திருமணம் செய்யாமலே குழந்தையும் பெற்றுக் கொண்டார். ஒரு வருடம் ஆன நிலையில் எமிக்கு நடிப்பு ஆசை எட்டிப்பார்க்கிறதாம்.

அடிக்கடி தனது புதிய கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டு வருகிறார். ஆனால் யாரும் பட வாய்ப்பு தந்ததுபோல் தெரியவில்லை. அதேபோல் சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமானவர் சுவாதி. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று ஆரம்பத்திலேயே கண்டிஷன் போட்டதால் அதிக படங்களில் நடிக்கவில்லை. போராளி, கனிமொழி, யட்சன், திரி, யாக்கை போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். தெலுங்கிலும் இதே கண்டிஷன் போட்டதால் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாய்ப்பு குறைந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தார். அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு பாய்பிரண்ட் விகாஸ் வாசு என்ற பைலட்டை மணந்து கொண்டு இல்லறத்தில் செட்டில் ஆனார்.

திருமணத்துக்கு பிறகு கணவருக்கு இந்தோனேஷியாவுக்கு மாற்றல் தரப்பட்டதால் கணவருடன் இந்தோனேஷியா சென்று செட்டிலானார் சுவாதி. ஒரு வருடம் அங்கு தங்கிய நிலையில் சுவாதிக்கு மீண்டும் நடிப்பு ஆசை துளிர் விட்டது. இதையடுத்து கணவனை இந்தோனேஷியாவில் விட்டு விட்டு சுவாதி ஐதாராபாத் வந்து பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கிறார். தற்போது பட நிறுவனங்களுக்கும், இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கேட்டு தூது விட்டு வருகிறார். தவிர வெப் சீரிஸில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்று தற்போது புது கண்டிஷன் போட்டிருக்கிறார். வெப் சீரீஸில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வருகிறது அதைவிட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையே சுவாதி அதிகம் எதிர்பார்க்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை