படப்பிடிப்பின் இடைவேளையில் நாயகனின் குழந்தையை கொஞ்சிய நயன்தாரா

by Nishanth, Nov 24, 2020, 13:13 PM IST

'நிழல்' மலையாள படத்தின் படப்பிடிப்புக்கு இடையே அந்தப் படத்தின் நாயகனான குஞ்சாக்கோ போபனின் குழந்தையை நயன்தாரா கொஞ்சி மகிழ்ந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா ஒரு மலையாள நடிகை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் மலையாளத்தை விட தமிழில் தான் இவர் அதிக படங்களில் நடித்து வருகிறார். பரபரப்பாக தமிழ் படங்களில் நடிக்கும் போது எப்போதாவது சிறிய கேப் கிடைத்தால் மட்டுமே மலையாள சினிமாவில் அவர் தலை காட்டுவார். 2003க்கு முன்னர் ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியை நடத்தி வந்த நயன்தாராவை பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு தான் தன்னுடைய 'மனசினக்கரே' என்ற படத்தில் ஜெயராமுடன் ஜோடியாக நடிக்க வைத்தார். இதன்பிறகு நயன்தாராவின் சினிமா வாழ்வில் ஏறுமுகமாகவே இருந்தது.

அடுத்தடுத்து மோகன்லாலுடன் இரண்டு படங்களில் அவர் ஜோடி சேர்ந்தார். இதன் பின்னர் தான் தமிழில் சரத்குமாருடன் 'ஐயா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு நயன்தாராவின் புகழ் ராக்கெட் வேகத்தில் பறந்தது. தற்போது தமிழ் சினிமாவில் இவரும் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் ஆர்.ஜே. பாலாஜியுடன் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நயன்தாரா கடந்த வருடம் மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'லவ் ஆக்சன் டிராமா' என்ற படத்தில் நடித்தார். பின்னர் தற்போது இவர் மலையாள முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் 'நிழல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கேரளாவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் படப்பிடிப்பை பார்ப்பதற்காக குஞ்சாக்கோ போபனின் மனைவி பிரியாவும், அவரது 3 வயது மகன் இஷாக்கும் சென்றிருந்தனர். படப்பிடிப்பு இடைவெளியில் இஷாக்கை நயன்தாரா கொஞ்சி மகிழ்ந்தார். அப்போது நயன்தாராவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை குஞ்சாக்கோ போபன் தன்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அந்தப் போட்டோ தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 'நிழல் படத்தை பிரபல எடிட்டர் அப்பு பட்டதரி இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும். இந்தப் படம் திரில்லராக தயாராகி வருகிறது என்று டைரக்டர் அப்பு பட்டதரி கூறினார்.

You'r reading படப்பிடிப்பின் இடைவேளையில் நாயகனின் குழந்தையை கொஞ்சிய நயன்தாரா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை