தோனி பட நடிகை கட்டி அணைத்து முத்தம்..

by Chandru, Nov 25, 2020, 09:58 AM IST

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர் கதாநாயகியாக திஷா பதானி. குங்ஃபூ யோகா என்ற சீன மொழி படத்திலும் நடித்திருந்தார். தவிர லோபர் என்ற தெலுங்கு மற்றும் வெல்கம் டு நியூயார்க், பாகி 2, பாகி 3 உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.திஷாவின் சகோதரி குஷ்பு பதானிக்கு பிறந்த தினம். இதையொட்டி அவருடன் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட திஷா, சகோதரி குஷ்புவை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தம் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.

திஷா கடற்கரை நடைப்பயிற்சியின் போது வெள்ளை நிற ஷார்ட்ஸ், வெள்ளை நிற டாப் அணிந்திருந்ததுடன் கொரோனா கட்டுப்பாடு கடைப் பிடிக்கும் வகையில் முககவசம் அணிந்திருந்தார். அவரது சகோதரி குஷ்பு, கறுப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் கறுப்பு நிற டாப்ஸ் அணிந்திருந்தார். பிறகு இணைய தள பக்கத்தில் திஷா கூறும்போது, மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்கள் டப்பு.. என்னுடைய பெரிய முன்னுதாரணம் நீதான். எப்போதும் பிரகாசமாக இருங்க என்னுடைய அக்காவே. லவ் யூ எனக் குறிப்பிட்டிருந்தார்.

திஷா தற்போது சல்மான்கான் நடிக்கும் ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் படத்தில் நடித்து வருகிறார். திஷாவை போலவே நடிகை கங்கனா ரனாவத் தனது தங்கை ரங்கோலி மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். எந்த தருணத்திலும் தங்கையை அவர் விட்டுக்கொடுப்பதில்லை. இருவரும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகின்றனர். சமீபத்தில் கூட மத உணர்வைத் தூண்டியதாக இருவர் மீதும் மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராகும் படி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. அதற்கு கங்கனா ஐகோர்ட்டில் இடைக்காலத் தடை பெற்றிருக்கிறார்.

நடிகை காஜல் அகர்வாலும் தங்கை நிஷா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். தங்கைக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆனது. அவரது குழந்தையை வீட்டிலிருக்கும்போது எந்நேரமும் காஜல் தான் வைத்து கொஞ்சிக்கொண்டிருப்பார். கடந்த அக்டோபரில் தான் காஜலுக்கு திருமணம் நடந்து. காதலன் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமண ஏற்பாடுகளை காஜல் தங்கை நிஷா முன்னின்று செய்தார். நடிகைகள் பலரும் சகோதரிகள் மீது பாசமழை பொழிவதை அடிக்கடி காண முடிகிறது.

More Cinema News


அண்மைய செய்திகள்