ராமராக நடிக்க ஒல்லிபிச்சான் ஆகும் நடிகர்..

by Chandru, Nov 25, 2020, 10:08 AM IST

திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தங்கள் உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் பணியை கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற ஒரு சில நடிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த பட்டியலில் நடிகர் சிம்பு இணைந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்காகத் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்தார்.

பாகுபலி படத்திற்காக ஹீரோ பிரபாஸ், வில்லன் நடிகர் ராணா இருவருமே தங்கள் உடல் எடையை கட்டுமஸ்தாக்கி நடித்தனர். இது கதாபாத்திரத்துக்கும் படத்துக்கும் பிளஸ் ஆக அமைந்தது. தற்போது பிரபாஸ், ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். இதில் வழக்கமான தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தையடுத்து ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். நாக் அஸ்வின் இயக்குகிறார். 3டி வடிவில் இப்படம் பிரம்மாண்ட செலவில் உருவாகவிருக்கிறது. இது ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ராமர் தோற்றத்துக்காக தனது உடல் எடையைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறார் பிரபாஸ். உணவு கட்டுப்பாடு மேற்கொண்டிருக்கிறார். தினமும் ஜிம்மிற்கு சென்று கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார். உடல் இளைக்கும் முயற்சியில் உள்ள பிரபாஸ் அதற்காகத் தனி டாக்டர் டீம் ஒன்றை அமைத்திருக்கிறார். உடற்பயிற்சியாளர் தசைகள் மெலிவதற்காகத் தகுந்த பயிற்சி அளிக்கிறார்.

உடலில் வெயிட் போடாமல் இருப்பதற்காக எந்தவகை உணவைச் சாப்பிடுவது என்பதைப் பராமரிக்கச் சத்துணவு வகைகளுக்கு ஆலோசனை சொல்ல நியூட்ரிஷியன் டாக்டர் ஒருவரும் இந்த டீமில் உள்ளனர். ஆதிபுருஷ் படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காகக் கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தின் படப் பிடிப்பு 2021ம் ஆண்டு தொடங்குகிறது. 2022ம் ஆண்டு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்