நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை..

by Chandru, Nov 25, 2020, 10:18 AM IST

நடிகைகள் பலரும் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு நாய்கள், பூனைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அதை ஏசி ரூமில் வைத்து சத்தான உணவுகள் கொடுத்து வளர்க்கின்றனர். பல நடிகைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்களின் செல்லப்பிராணிகளுடன் தான் அதிக நேரத்தைச் செலவழித்தனர்.

இப்படித்தான் நடிகை ரதி (முரட்டுக்காளை, உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்தவர்) செல்லப் பிராணியைப் பிரிய மனம் இல்லாமல் வெளிநாடு செல்லும்போது கூடவே அழைத்துச் சென்றார். அந்நாட்டு சட்டவிதிப்படி அவர் அந்த நாயை மீண்டும் அழைத்து வர முடியாமல் வெளிநாட்டிலேயே 8 மாதமாக தங்கி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டால் தான் அங்கிருந்து நடிகை இந்தியா திரும்ப முடியும் என்ற நிலையில் தவித்து வருகிறார். அந்த நாயை அங்கு விட்டுவிட்டு வரவும் விதிகளில் இடமில்லையாம்.

நடிகை சமந்தா கடந்த 2018ம் ஆண்டு ஹாஷ் என்ற செல்ல நாய்க்குட்டியை வீட்டுக்குக் கொண்டு வந்தார். கடந்த ஆண்டு அதன் 1வது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்காக ஸ்பெஷல் பார்ட்டி வைத்தார். அதற்கு நெருங்கிய நண்பர்களையும், அவர்களது செல்லப்பிராணிகளையும் அழைத்து விருந்து கொடுத்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஹாஷ் செல்லப் பிராணியும் 2வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார்.கொரோனா கால கட்டம் என்பதால் யாரையும் இம்முறை அழைக்கவில்லை. ஆனால் தனது நாயை அழகுபடுத்தி இருந்த சமந்தா அதற்கு சுவட்டர் மாட்டிவிட்டு அதனுடன் விளையாடி மகிழ்ந்தார். அந்த புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதைப் பார்த்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பொறாமை கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஹாஷ் நாய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கல்யாணி உங்களின் செல்ல ஹாஷை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது.அதற்கு சுவட்டர் அணிவித்திருப்பதும் , அது உங்கள் பேச்சைக் கேட்டு எழுந்து நிற்பதும் அழகு. என்னுடைய செல்லத்தைப் பாருங்கள், அதன் கழுத்தில் சின்னதாக ஒரு டை கூட அணிய அனுமதிப்பதில்லை என்றார்.கல்யாணி நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்திருந்தார். தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்