அரசியலில் குதிக்க திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கும் சர்ச்சை நடிகை..!

by Logeswari, Nov 25, 2020, 11:46 AM IST

தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டத்தில் சிறிய கண்ணோட்டத்தில் நடித்து உள்ளார். அதன் பிறகு பீக் பாஸ் 3 என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதும் பல சம்பவங்களை செய்து சர்ச்சை நடிகையில் ஒருவராக இருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய பின் மும்பையில் குடிபெயர்ந்தவர் நாளுக்கு நாள் எதாவது புது பிரச்சனையைக் கிளப்பவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது போல…

தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னனி கதாநாயகனான சூர்யாவை கூறி வைத்தார். ஆனால் சூர்யாவிடம் மீரா மிதுனின் பருப்பு வேகவில்லை. சூர்யாவை தொடர்ந்து த்ரிஷா, ஐஷ்வர்யா ராஜேஷ் எனப் பலரையும் வம்புக்கு இழுத்தார். ஆனால் யாரும் இவரை கண்டுகொள்ளவில்லை. சில நாளுக்கு முன் அவரது இன்ஸ்டாப்பக்கதில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து அதற்கு couple goals என்று பெயரும் வைத்துள்ளார்.

ஆனால் போட்டோவில் அவர் கூட இருக்கும் ஆண் மீரா மிதுனை விடச் சிறியவராக இருக்கக் கூடும் என்னும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் மக்கள் ஒரு சிறிய பையனின் வாழ்க்கையைக் கெடுத்துவிடாதே போன்ற கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் மீரா மிதுன் கடந்த ஜூன் மாதம் எனக்கு நிச்சியதார்த்தம் முடிந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தனக்கு திருமணம் என்றும் மீடியாவில் கூறியுள்ளார்.ஆனால் மாப்பிள்ளை யார்?அவர் என்ன வேலை செய்கிறார் ?போன்ற தகவல்களை வெளியே சொல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மீரா மிதுன் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளார்.. இவருக்கு எப்பொழுதும் ட்ரெண்டிலே இருந்து வர வேண்டும் என்று ஆசை போல. தற்பொழுது ஒரு புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். தீடிரென்று அரசியலில் சேர உள்ளதாகவும் அதற்காக திருப்பதியில் இருக்கும் ஏழுமலையானை சந்திக்க வந்ததாகக் கூறி அவரது இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். இவரை போல பிக் பாஸ் கஸ்தூரி மற்றும் வனிதா விஜயகுமார் என இரண்டு பெரும் அரசியலில் சேருவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் எந்த கட்சியில் சேரப் போகின்ற தகவலை வெளியிடவில்லை.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்