திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 25, 2020, 11:35 AM IST

திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் கீழ் இயங்கும் விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்கள்-28 காலியிடங்கள்

பணியின் பெயர்: சமையலர் மற்றும் துப்புரவாளர்

பணியிடங்கள்: 28

வயது: 18 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவராக உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: தமிழில் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சமையலராக அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம்: ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 03.12.2020க்குள் அனுப்பிட வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/2020112088.pdf

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை