குழந்தைகளுடன் கும்மாளமிடும் வில்லன்..

by Chandru, Nov 25, 2020, 14:17 PM IST

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் " தகவி".படம் பற்றி இயக்குனர் சந்தோஷ்குமார் கூறும்போது, "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தான்டா வளர்ச்சி ..... உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றைய சமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தைக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம்.

இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் " நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளைச் சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்கச் செய்வது ஒரு சவாலான காரியம். இதைச் சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்." என்றார்.

சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார் தயாரிக்கிறார்.நான் கடவுள் ராஜேந்திரனுடன், சிங்கம் புலி , அஜய் ரத்தினம், வையாபுரி மற்றும் ராகவ் , ஜெய் போஸ் இருவரும் நாயகன்களாக நடிக்க இவர்களுடன் சாப்ளின் பாலு, பயில்வான் ரங்கநாதன், தேவி, உமா, ஜீவிதா, ஐந்து கோவி லான், கிங்காங், விஜயபாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.சேலம், ஏற்காடு, ஒடஞ்ச பாலம், விநாயகம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, உட்பட அதனைச் சுற்றி உள்ள இடங்களில் படம் வளர்ந்துள்ளது.

அரிகாந்த் ஒளிபதிவு செய்கிறார். கவிஞர் பிறை சூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசை அமைக்கிறார். எம்.சக்திவேல் கதை, வசனம் எழுதுகிறார். டாக்டர் .சி.சரவண பிரகாஷ் இணைத் தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.எஸ். நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தை சந்தோஷ் குமார் . ஜெ. திரைக்கதை அமைத்து இயக்குகிறார். பின்னனி இசைச் சேர்ப்பு நடைபெற்று வரும் இப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

You'r reading குழந்தைகளுடன் கும்மாளமிடும் வில்லன்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை