இணையதளத்தில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி.. டிவிட்டர், இன்ஸ்டாவில் சிக்னல் பரிமாற்றம்..

by Chandru, Nov 25, 2020, 15:12 PM IST

மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படம் பரத் அனே நேனு. இப்படம் பரத் எனும் நான் பெயரில் தமிழில் வெளியானது, இதில் ஹீரோயினாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி படத்திலும் நடித்துள்ளார் மற்றும் பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

கியாரா அத்வானி நடித்த இந்தி படம் இந்து கி ஜவானி பட ட்ரெய்லர் வெளியானது. அதில் கியாரவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் கியாரா. இந்நிலையில் கியாரா நடித்த பட டிரெய்லரை பாராட்டிப் படத்தை 11 டிசம்பரில் பார்க்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த கியாரா, இந்த இந்து உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று காதல் ஒழுக கூறினார். இவர்கள் இருவரின் இணைய தள காதல் சிக்னல் வசனங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.ஏற்கனவே கியாரவின் இன்ஸ்டாகிராம் சாட் ஷோவில் திடீரென்று மல்ஹோத்ரா தோன்றி அவரிடம் பேசி சப்ரைஸ் தந்தார். பிறகு அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்து கூறிய சித்தார்த், பெரிய காதலுடன் அரவணைப்பும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த கியாரா நன்றி குரங்கு என்று தமாஷாக பதில் அளித்தார்.
சினிமாவில் தான் பார்க்காமல் காதல், இணைய தள காதல் நடக்கிறது என்றால் இங்கு நிஜத்திலும் கியாரா, சித்தார்த் ஜோடி இணையத்தில் காதல் செய்வது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

You'r reading இணையதளத்தில் காதலிக்கும் நட்சத்திர ஜோடி.. டிவிட்டர், இன்ஸ்டாவில் சிக்னல் பரிமாற்றம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை