எதிரிகள் ஆன விஷால். ஆர்யா.. எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது..

by Chandru, Nov 26, 2020, 12:10 PM IST

திரையுலகில் ரஜினி,கமல். விஜயகாந்த், சரத். விஜய், அஜீத். சிம்பு, தனுஷ்போல் மற்றொரு ஹீரோக்கள் ஜோடி இருக்கிறது அவர்கள் விஷால், ஆர்யா. இவர்கள் தங்களை இரட்டையர்கள்போல் முன்னிருத்த விரும்பவில்லை. காரணம் விஷால் ஆரம்ப கட்டங்களில் விஜய்யை குறிவைத்த தனது நகர்வுகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையில் விஷால், ஆர்யா இருவரும் பாலாவின் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்தனர். அது வரவேற்பை பெற்றது. இதற் கிடையில் வாசுவும் சரவ ணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் ஆர்யா இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இரட்டை நாயகர்களாக இணைந்து நடிக்கின்றனர். ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப் பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. விஷால்-ஆர்யா நடித்த காட்சிகள் படமாகின. இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படா மலிருந்தது. தற்போது அதனை விஷால் - ஆர்யா இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர். படத்துக்கு எனிமி (எதிரி) என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில்.இதுதான் கடைசி.. ஆர்யா இப்போது என்னுடைய எனிமி. இதைத் தவிர வேறு வழியில்லை. போர்க்களத்தில் நாங்கள் சண்டையிடுவதை தவிர வேறு வழிகிடையாது. அது நல்லதாக முடியும் என்றார்.
ஆர்யா,நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது. ஊ ஊ ஆஆஆ நீ என் எனிமிடா. என் எதிரியை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். . இதுதான் எனது அடுத்த பட டைட்டில். என குறிப்பிட்டிருந்தார். எனிமி. விஷால் என ஹேஷ் டேக்கு கள் பகிர்ந்திருக்கிறார் ஆர்யா.
இப்படத்தில் மிர்னலினி தேவி நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. இதன் முதல் கட்ட படிப்பிடிப்பை படக் குழு ஐதராபாத்தில் முடித் துள்ளது. தமன் இசை அமைக் கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப் பதிவு செய்கிறார். ரவி வர்மா சண்டை காட்சிகள் அமைக் கிறார்.
இது தவிர விஷால் சக்ரா என்ற படத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து துப்பறிவாளன்2 படம் இயக்கி நடிக்க உள்ளார். ஆர்யா டைரக்டர் ப.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் நடிக்கிறார்.

You'r reading எதிரிகள் ஆன விஷால். ஆர்யா.. எப்போதும் நண்பர்களாக இருக்க முடியாது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை