உள்ளூர் நடிகைகளே கோலி விட்டில் காலம்தள்ளுவ தௌ பெரிய விஷயமாகிவிட்ட நிலையில் இலங்கையிலிருந்து இந்தியா வந்து இங்கு கமல் ஹாசன் நடத்தி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.
நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் உள்ளிட்டவர்களின் அன்பை பெற்றார் லாஸ்லியா. ஷோ முடிந்தததும் தனது அதிர்ஷ் டத்தை கோலிவிட்டில் சோதிக்க முயன்றார். அதற்காக அவர் சென்னையிலேயே தங்கினார். இவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் இலங்கையில் உள்ளனர். தந்தை மரியநேசன் கடந்த 10 ஆண்டாக கனடாவில் பணி புரிந்து வந்தார்.
லாஸ்லியாவின் கோலிவுட் முயற்சி கைகொடுத்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நடிக்கும் ஃபிரண்ட் ஷிப் படத்தில் ஹிரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன்பிறகு விளம்பர படங்களில் நடித்தார், இந்நிலையில் கனடாவில் வசித்து வந்த அவரது தந்தை திடீர் மாரடைப்பால் சில நாட்களுக்கு முன் காலாமானார். அதைக் கேட்டு கதறி அழுத்தார் லாஸ்லியா. அவருக்கு இயக் குனர் சேரன் மர்றும் சில நடிகைகள் அறுதல் கூறினர்.
லாஸ்லியாவின் தந்தை உடல் கனடாவிலிருந்து இலங்கை கொண்டு வரப்படுகிறது. சில நடைமுறைகள் முடிக்க வேண்டி இருந்ததால் காலதாமதனது. இதையடுத்து லாஸ்லியா தனது குடும்பத் தினருடன் துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக சொந்த நாடான இலங்கை சென்றார். ஆனால் அங்கும் அவரை துரதிருஷ்டம் தொடர்ந்தது. இலங்கையின் விதிமுறைப் படி கொரோனா காலகட்டத் தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா டெஸ்ட் எடுத்து நெகடிவ்வாக இருந்தால் மட்டுமே வீட்டுக்கு போக முடியும் என்பதால் லாஸ்லியா சொந்த நாட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இது முடிந்த பின்னர் தான் அவர் தனது குடும்பத்தாரை சந்திக்க முடியும்.
கனடாவிலிருது லாஸ்லியா வின் தந்தை உடல் இலங்கை வருவதற்கு முன்பாக அவர் மரணம் பற்றி வதந்தி பரவி யது. மரியநேசன் இயற்கை யாக இறக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு அவர் உடலை அனுப்புவதற்கு முன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் அவரது மரணம் இயற்கையானதுதான் என்று டாக்டர்கள் உறுதி செய் தனர். இதையடுத்து இதுகுறித்து யாரும் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்ப வேண்டாம் என்று லாஸ்லியா வின் மாமா கேட்டுக்கொண்டிருக்கிறார்.