சமந்தா நீச்சல் உடை போட்டோ வெளியிட மறுப்பு.. கவர்ச்சி படம் வெளியிட்டு கிண்டல்..

by Chandru, Nov 26, 2020, 19:30 PM IST

நடிகைகளின் சுற்றுலா தலம் ஆகிவிட்டது மாலத்தீவு. கடந்த இரண்டு வாரமாக பல நடிகைகள் மாலத்தீவிற்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர் இந்த மாத தொடக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் தேனிலவு பயணமாக மாலத் தீவு சென்றார். அங்கு கணவருடன் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அவரைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, பிரணிதா என பல நடிகைகள் படையெடுத்தனர்.

நானும் வருவேன் என்று கணவர் நாக சைதன்யாவின் பிறந்தநாளை கொண்டாட சமந்தாவும் கணவருடன் மாலத்தீவு சென்றார். மாலத்தீ வில் சென்ற நடிகைகள் எல்லோருமே நீச்சல் உடை அணிந்து தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டனர். சமந்தா படமும் நீச்சல் உடை யில் வரும் என்று எதிர்ப் பார்த்த நிலையில் அவர் நீச்சல் உடை படம் வெளிடாமல் ரசிகர்களை ஏமாற்றினார். நீச்சல் குளத்தில் நின்றபடி தனது படம் ஒன்றை வெளி யிட்டிருக்கிறார். அதில் டாப்ஸ் அணிந்தநிலையில் மற்ற உடல் தோற்றதை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தார். டாப்ஸ் அணிந்திருக்கும் படமே படு கவர்ச்சியாக இருக்கிறது. அதில் அவர், என்னுடைய நீச்சல் உடை படத்தை எதிர் பார்த்தீர்களா அதுதான் கிடை யாது என்பது போல் நாக்கை சுழற்றி அழகுகாட்டி கிண்டல் செய்துள்ளார்.

சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை நெட்டில் வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் நாக சைதன்யாவின் ரசிகர்கள் சமந்தாவுக்கு கண்ட னம் தெரிவிக்கத் தொடங் கினர். நாகேஷ்வராராவ் குடும் பத்தில் வாழ்க்கை பட்டிருக் கிறீர்கள் அந்த ஃபேமலிக் கென்று ஒரு மரியாதை இருக் கிறது அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள் என்று கண்டித் தனர். அதன்பிறகு சமந்தா கவர்ச்சி படங்கள் வெளியிடு வதை குறைத்துக்கொண்டார். இதனால்தான் மாலத்தீவிலி ருந்து சமந்தா நீச்சல் உடை படத்தை வெளியிட வில்லை என்று கூறப்படுகிறது. மீறி வெளியிட்டால் நாக சைதன்யாவின் ரசிகர்களின் கோபத்துக்குள்ளாக நேரிடும் அல்லவா?

மேலும் சமந்தா வெளியிட்ட மெசேஜில் "நீங்கள் பிரபஞ்சம், சிறிது நேரம் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்து கிறீர்கள்" என தத்துவம் உதிர்த்திருந்தார், இப்படம் வைரலாகி வருகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை