புட்ட பொம்மா பாடல் புகழ் நடிகை கனவு நனவானது எப்படி?

by Chandru, Nov 26, 2020, 19:48 PM IST

தமிழில் முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. அதன்பிறகு அவர் இந்தியில் படங்கள் நடிக்கத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிருத்திக் ரோஷனின் 'மொஹென்ஜோதரோ' மூலம் பாலிவுட்டில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சித்தார், ஆனால் அப்படம் பாலிவுட்டில் ஹிட்டா க அமையவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது டோலிவுட்டில் பூஜா ஹெக்டே முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஸ்டார் ஹீரோக்களுடன் பேக்-டு-பேக் ஹிட் படங்களை அளித்திருக்கிறார். அவர்ம் நடித்த 'அரவிந்த சமேதா', 'ஆலா வைகுந்தபுரம்லோ' மற்றும் 'மகர்ஷி' போன்ற சூப்பர் ஹிட்களை வழங்கி னார். அவர் இப்போது தெலுங்கு மற்றும் இந்தி இரண்டிலும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறார்.

போட்டிகள் நிறைந்த திரையுலகில் ஒரு கதாநாயகி முன்னணி இடத்தை அடை வது எளிதான காரியமல்ல. எல்லாவற்றுக்கும் பின்னால், நிறைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருக்கிறது. அது பூஜாவிடம் அதிகமாகவே காணப்பட்டது.

பூஜா தனது வாய்ப்புகளை சரியான முறையில் பயன் படுத்திக் கொண்டு தனது கனவுகள் நனவாகியதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். அவர் கூறும் போது,சினிமாவில் யார் யாருடனெல்லாம் நடிக்க வேண்டும் என்று முன்பு நான் விரும்பினேனோ ஹீரோக் களுடன் பணிபுரிகிறேன் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கி றேன். கடின உழைப் பால் யாருடைய கனவுகளை யும் நனவாக்க முடியும் என்று கூறினார்.

தனது உழைப்பின் பலனை அறுவடை செய்கிறார் பூஜா அடுத்து பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மோஸ்ட் எலிஜிபில் பேசுலர்' இந்தியைல் சல்மான் கானுடன் 'கபி ஈத் கபி தீபாவளி' படத்தில் பணி யாற்றி வரும் இவருக்கு ரோஹித் ஷெட்டியின் 'சர்க்கஸ்' படத்தில் வாய்ப்பு கிடைத்ததுள்ளது.

You'r reading புட்ட பொம்மா பாடல் புகழ் நடிகை கனவு நனவானது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை