வீலீங் செய்யும் தல நடிகர்.. நெட்டில் டிரெண்டிங் ஆகிறது..

by Chandru, Nov 27, 2020, 11:24 AM IST

நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. அங்கு அஜீத் பங்கேற்றபைக் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. வேகமாக வந்த அஜீத் மோட்டார் பைக்கில் வந்த ஸ்டண்ட் வீரர்களுட்டன் மோதினார். இந்த சண்டை காட்சியில் அஜீத் பைக் பேலன்ஸ் தவறி கவிழ்ந்தது. கீழே விழுந்த அஜித்துக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. பிறகு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் சண்டைக் காட்சியில் கலந்துகொண்டார். அஜீத் ரிஸ்க்கான காட்சிகளில் கூட டூப் பயன்படுத்துவதில்லை என்பதால் அவ்வப்போது அவர் கை, கால்களில் காயம் ஏற்படுகிறது.

அஜித் வலிமை படத்தில் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று முன் சக்கரத்தை அந்தரத்தில் தூக்கி வீலிங் செய்தார். அந்த புகைப்படத்தை தற்போது நெட்டில் ரசிகர் வைரலாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் மங்காத்தா, விவேகம் படத்தில் அஜீத் மோதிய பைக் சண்டை காட்சியுடன் வலிமை சண்டை காட்சியை ஒப்பிட்டு வருகின்றனர். வலிமை படத்தை கடந்த தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு தொடங்கினார்கள். ஆனால் கொரோன ஊரடங்கால் படப்பிடிப்பு தள்ளிப் போனது இதனால் பெரும் பகுதி படப்பிடிப்பு நடத்த முடியாமலிருந்தது. தற்போது வேகமாக படப்பிடிப்பு நடக்கிறது. ஆனால் பொங்கல் தினத்தில் படம் வெளிவருமா என்பது சந்தேகமே என்கிறார்கள். அநேகமாக பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாத்தத்தில் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை