போதை மருத்து விவகாரம் சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடங்கியது. சுஷாந்த் மரணத்துக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினார் என்று புகார் அளித்தார். அதுபலவேறு கட்டங்களை தாண்டி ரியாவை போதை மருத்து தடுப்பு அதிகாரிகள் கைது செய்து அவரடம் வாக்குமுலம் பெற்றனர். ஒரு மாதம் சிறையில் அடைப்பட்டிருந்த ரியா பின்னர் ஜாமீன் பெற்றி வெளியில் வந்தார்.
பெங்களிரில் சில மாதங்களுக்கு முன் போதை மருந்து விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் பெங்களூர் பரப்பனா அக்ரஹார சிறையில் போலீசார் அடைத்தனர். இருவரும் ஒரே அறையில் அடைக்கப்படிருந்தனர். ராகினிக்கு புத்தக படிக்கும் பழக்கம் இருந்ததால் அவர் இரவில் சிறையில் நீண்ட நேரம் புத்தகம் படித்து வந்தார். அவர் விளக்கை போட்டுக்கொண்டு புத்தகம் படிப்பது தந்து தூக்கத்துக்கு இடயூறாக இருக்கிறது என்று சஞ்சனா கூறினார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரவரையும் பிரிதது மற்ற பெண் கைதி உள்ள சிறையில் அடைத்தனர். ராகினி, சஞ்சனா இருவரும் ஏற்கனவேஎ 2 முறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை. சிறையில் உள்ள நூலகத்த்லிருந்து ராகினி புத்தக்ம் படிப்பதை தொடர்ந்த வண்ணம் உள்ளார். தர்போது சஞ்சனாவும் புத்தக படிக்க தொடங்கி இருக்கிறார். மனதை நல்வழிபடுத்தும் புத்தகம் படிப்பதில் சஞ்சானா ஆர்வம் காட்டுகிறார்.