மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த ஹீரோயின்..

by Chandru, Nov 28, 2020, 10:41 AM IST

சசிகுமார் ஜோடியாகப் பிரம்மன், சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்கச் சம்மதித்தார். லாவண்யா சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். செல்லப் பிராணிகளைப் பராமரித்து வளர்க்கிறார். தவிரத் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபடுகிறார்.

சமீபத்தில் இவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, அதற்காக பெரிய தொகை சம்பளம் தருவதாகத் தெரிவித்தனர். ஆனால் அதை லாவண்யா ஏற்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
லாவண்யா போல் சாய் பல்லவியும் இதுபோன்ற வந்து எதிர்மறை விளம் பரத்தில் கடந்த ஆண்டு நடிக்க மறுத்துவிட்டார்.

சமுதாய அக்கறையுடன் சில நடிகைகள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மறுக்கின்றனர். . சில நடிகைகள் கமர்ஷியல் ரீதியாக எந்த விளம்பரத்திலும் நடிக்க ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் மதுபான விளம்பரத்தில் கிடைக்கும் சம்பளத்துக்காக ஏற்கனவே பூஜா ஹெக்டே, தேஜஸ்வி மடிவாடா. பாயல் ராஜ்புத் போன்றவர்கள் நடித்துள்ளனர். நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராத் கோலி போன்றவர்கள் ஆன் லைட் சீட்டாட விளம்பரத்தில் நடித்தனர். தற்போது அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்