புற்றுநோய் பாதித்த நடிகரை நேரில் சந்தித்த நடிகை..

by Chandru, Nov 28, 2020, 10:32 AM IST

புற்றுநோய் பாதிப்பு திரையுலகில் அடிக்கடி கேள்விப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் காமெடி நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான், நடிகை மனிஷா கொய்ராலா போன்றவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமாகி திரும்பினார்கள். ஆனாலும் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோர் கொரோனா லாக் டவுன் காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்கள்.

கொரோனா லாக் டவுனில் நடிகர் சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது உடனடியாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா சிகிச்சை எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து வீடு திரும்பினார். ஆனால் அதேசமயம் புற்று நோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் நுரையீரலில் 3வது கட்ட புற்று நோய்ப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காகச் சேர்ந்தார். ஒன்றிரண்டு மாத சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆனதுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.

யஷ் நடிக்கும் கே ஜி எஃப்2 படப்பிடிப்பில் சஞ்சய்தத் கலந்துகொள்ள ஐதராபாத் வந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கினார். ஐதராபாத்தில் நடிகை கங்கனா ரானவத் தலைவி படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். அவரும் சஞ்சய் தத் தங்கி இருந்த ஓட்டலில் தங்கி இருக்கிறார். சஞ்சய் தத் தங்கியிருப்பதை அறிந்த கங்கனா அவரை நேரில் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிறகு கங்கனா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும் போது,சஞ்சய்தத் ஓட்டலில் தங்கி இருக்கிறார் என்பதை அறிந்து அவரை சென்று சந்தித்தேன். அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் நலமுடன் முன்பைவிட இப்போது மிகவும் அழகாக இருக்கிறார். அவர் நீண்ட நாள் வாழவும் அவருடைய நல்ல உடல் நிலைநலம் பெற வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

கங்கனாவின் மெசேஜிக்கு பதில் அளித்த சஞ்சய் தத்.உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம். உங்களது அன்பு மற்றும் வாழ்த்துக்கு நன்றி. ஆசீர்வாதங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கங்கான தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். இதில் அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், மதுபாலா, பாக்யஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர். கே ஜி எஃப் 2வில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை