தூங்கும் போது கீர்த்தி சுரேஷுடன் செல்ஃபி எடுத்த ஹீரோ.. நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

by Chandru, Nov 28, 2020, 10:22 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால் சிவகார்த்திகேயன் எனப் பிரபல ஹீரோக்களுடன் தமிழில் நடித்து வந்தார்,. அதேபோ தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் ஆசை வந்தது. அதற்கேற்ப இந்தியில் நடிக்க அழைப்பும் வந்தது. அதையேற்று கடந்த ஆண்டு மும்பை சென்று அங்கேயே தங்கினார். இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தி நடிகைகள் ஒல்லிபிச்சான் தோற்றத்தில் இருப்பதால் கீர்த்தியும் தனது உடல் எடையைக் குறைத்தார், ஆளே அடையாளம் தெரியாதளவுக்கு ஒல்லியானார்.

ஆனால் அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. கீர்த்தியை நடிக்க அழைத்த இந்தி பட நிறுவனம், அவர் மிகவும் ஒல்லி தோற்றத்துக்கு மாறிவிட்டதால் குறிப்பிட்ட வேடத்துக்குப் பொருந்தமாட்டார் என்று கீர்த்தியை படத்திலிருந்து கைகழுவியது. அத்துடன் இந்திக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் தென்னிந்தியப் படத்தில் நடிக்க வந்தார் கீர்த்தி.தமிழில் பெண்குயின் படத்தில் நடித்தார். அப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளத்தில் வெளியானது.

பிறகு தெலுங்கில் மிஸ் இந்தியா படத்தில் நடித்தார். அப்படமும் ஒடிடி தளத்தில் வெளியானது. தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணி காயிதம் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் நிதின் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் கீர்த்தி. படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் கீர்த்தி சுரேஷ் சேரில் அமர்ந்தபடி கண்களில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு அப்படியே சாய்ந்த படி குட்டி தூக்கம் போட்டார். அதைக் கவனித்த ஹீரோ நிதின். இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் சத்தமில்லாமல் அவர் அருகே சென்றனர்.

கீர்த்தியை டீஸ் செய்வதற்காகக் கண்களில் துணியை வைத்துக் கொண்டு தூங்கிய நிலையில் கீர்த்தி இருக்கும்போது செல்ஃபி படம் எடுத்து வெளியிட்டார். அதில், காட்சிக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் கீர்த்தி ரிலாக்ஸ் செய்கிறார். ஆனால் நாங்கள் ஒருபக்கம் வியர்வை சொட்டிக் கொண்டிருக்கிறோம் எனப் பதிவிட்டார். பின்னர் அதற்குப் பதில் அளித்த கீர்த்தி, உங்களுக்குப் பொறாமை அப்படித்தானே” என்ற நக்கல் செய்தார். ரங் தே படப்பிடிப்பில் இந்த ருசிகரம் நடந்தது. இப்படத்துக்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

You'r reading தூங்கும் போது கீர்த்தி சுரேஷுடன் செல்ஃபி எடுத்த ஹீரோ.. நடிகை என்ன சொன்னார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை