கொரோனா பாதிப்பு லட்சக் கணக்கான மக்களுக்குப் பரவியது. சிகிச்சைக்குப் பிறகு பலர் குணம் அடைந்தனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, தமன்னா, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர் விஷால் போன்ற பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.
இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் டாக்டர் ராஜசேகர் கடந்த அக்டோபர் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தயாரானார்.
திடீரென்று அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். ஆனால் கொரோனா பாதிப்பால் அவரது உடல் நிலை மிகவும் சோர்வாகவும் பலமில்லாத நிலையும் நீடித்து வருகிறது வீட்டிலிருந்தபடியே அதற்காகச் சிகிச்சை பெருகிறார். மூக்கிலும் அவர் ஆக்ஸிஜன் சுவாசத்துக்காக டியூப் வைத்து நடமாடுகிறார்.
வீட்டிலிருந்து வெளியில் வரக்கூடாது என்று டாக்டர்கள் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். இதனால் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் நடித்து வந்த படப்பிடிப்பு மீண்டும் அவர் குணம் ஆகி வரும் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ராஜசேகர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதை இன்னும் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளார்.
முன்னதாக ராஜசேகர் மட்டுமல்லாமல் அவர் மனைவி ஜீவிதா மற்றும் இரண்டு மகள்களும் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் பூரண குணம் அடைந்தனர். கொரோனா தொற்று பயம் காரணமாக ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படாமலிருக்கிறது. ஆனால் விரைவில் இப்படத்தின் படப் பிடிப்பைத் தொடங்க புதிய அட்டவணையைப் படக் குழு தயாரித்துள்ளது. ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.