மாலத்தீவு கும்மாளம் முடிந்து ஊர் திரும்பிய நடிகைகள்..

by Chandru, Nov 28, 2020, 09:49 AM IST

நடிகைகளை கொரோனா காலகட்டம் பாடாய்ப்படுத்தி விட்டது. தினமும் காரிலும் விமானத்திலும் ஷூட்டிங் பறந்துகொண்டிருந்தவர்கள் 7 மாதம் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் உடற்பயிற்சி, செல்ல பிராணிகளுடன் விளையாட்டு, சமையல் என்று நேரத்தை கழித்தனர். ஊரடங்கில் காஜல் அகர்வால் திருமணமும் நடந்தது. தனது தொழில் அதிபர் பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டு தேனிலவுக்காக மாலத்தீவு சென்று பொழுதைக் கழித்து வருகிறார். காஜலை தொடர்ந்து வரிசையாக நடிகைகள் சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, பிரணிதா ஆகியோரும் சென்றனர்.

ரஜினியுடன் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹாவும் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு நீச்சல் உடையில் நடிகைகள் தங்களது புகைப் படங்களை கிளாமராக வெளியிட்டு ரசிகர்களுக்குக் கவர்ச்சி விருந்து பகிர்ந்தனர். சோனாக்‌ஷியை அதிகமாகக் கவர்ச்சி உடையில் காண முடியாது. ஆனால் அவரும் இம்முறை நீச்சல் உடை அணிந்த படங்களை வெளியிட்டு அசத்தினார்.

சுமார் 3 வாரமாக நடிகைகள் பட்டாளம் மாலத்தீவில் முகாமிட்டிருக்கின்றனர். தற்போது அவர்களுக்குப் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவிலிருந்து புறப்பட்டார். அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தில் இறுதிக் கட்ட படிப் பிடிப்பில் கலந்து கொண்டார். நடிகை சோனாக்‌ஷியும் மாலத்திவிலிருந்து இந்தி பட ஷூட்டிங்கிற்காக மும்பை திரும்பினார்.அவர் மாலத்தீவிலிருந்து பிரிய மனமில்லாமல் ஒரு மெசேஜ் வெளியிட்டார்.அதில், மாலத்தீவிலிருந்து ஒவ்வொரு முறை புறப்படும் போதும் என் இதயம் மீண்டும் இங்கு வா என்று சொல்கிறது, விரைவில் சந்திப்போம் மால்தீவஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார் சோனாக்‌ஷி.

காஜல் அகர்வாலுக்கும் டிசம்பரில் தொடங்கும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதால் அவரும் மாலத்தீவு சுற்றுலா முடிந்து புறப்படத் தயாராகி வருகிறார். நடிகை சமந்தா இன்னும் விடுமுறை மூடியேலேயே இருப்பதால் கவர்ச்சி உடையில் மாலத்தீவை சுற்றி வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

You'r reading மாலத்தீவு கும்மாளம் முடிந்து ஊர் திரும்பிய நடிகைகள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை