காதல் தோல்வி வேதனையின் உச்சம்.. பிரபல நடிகரின் மாஜி மனைவி நெகிழ்ச்சி..

by Chandru, Nov 28, 2020, 14:17 PM IST

தமிழில் நடிகர் பிரபுதேவா, பார்த்திபன் நடித்த நகைச் சுவை படம் ஜேம்ஸ் பாண்டு. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரேணு தேசாய். இவர் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக ஜானி, பத்ரி ஆகிய படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால் சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ரேணு தேசாய் மீண்டும் படங்களில் நடிக்கிறார், 2வது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.ஆனால் அதுபற்றி பிறகு தகவல் எதுவும் வெளியாகவில்லை.ரேணு தேசாய் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், காதல் தோல்வி பற்றிக் கேட்டார். அதற்கு நெகிழ்ச்சியான பதில் அளித்தார்.
காதல் நிறைவேறும்போது சந்தோஷமாக இருக்கிறது.

பின்னர் அதுவே தோல்வி அடையும்போது வேதனை மனதைக் கவ்வுகிறது. இதனால் மனம் தளர்ந்து தவறான முடிவுகள் எடுக்கக்கூடாது என்பது முக்கியம். காதலின் தோல்வியை நான் அனுபவித்திருக்கிறேன். நான் நேசித்தவர் என்னைத் தூக்கி எறிந்தார். (யார் என்று பெயர் சொல்லவில்லை) அது தாங்க முடியாத வேதனையாக இருந்தது. அப்போது குடும்பத்தினர் ஆதரவு ரொம்ப முக்கியம். அந்த துன்பத்திலிருந்து மீண்டு வர வேண்டும். காதல் தான் வாழ்க்கையின் முடிவு கிடையாது. பிற விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி பணியாற்றினால் அந்த வேதனையிலிருந்து வெளியில் வர முடியும் என்றார்.

More Cinema News


அண்மைய செய்திகள்