சூரியகுளியலுக்கு கவர்ச்சியாக கடற்கரையில் படுத்த நடிகை..

by Chandru, Nov 29, 2020, 09:51 AM IST

திரைப்பட நடிகைகள் கடந்த 7 மாதமாக கொரோனா ஊரடங்கில் அடக்கி வைத்திருந்த சுற்றுலா ஆசையை ஊரடங்கு தளர்வில் ஆசை தீர அனு பவித்து வருகின்றனர். சுற்றுலாவுக்கென்று ஒரே தீவுதான் இருக்கிறது என்பது போல் பெரும்பாலான நடிகைகள் மாலத்தீவிலேயே ஒட்டு மொத்தமாகமாக முகாம் போட்டனர். காஜல் அகர்வால் முதல் சமந்தாவரை கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்து தங்களது சாகசங்களை செய்தார்கள். ஆனால் முனி மற்றும் காஞ்சனா 3 நடிகை வேதிகா மாலத்தீவில் வித்தியாசமான குளியல்கள் நடத்தி வருகிறார்.

தாமரை தடாகத்தின் நடுவில் உள்ள வெண்ணீர் பாத் டப்பில் லேசான மழை தூரல் இருக்கும் சமயத்தில் குளியல் போட்டு இயற்கையான குளியல் சுகத்தை அனுபவித்தார். தற்போது மற்றொரு குளியலுக்கு கடல் மணலில் வெட்டவெளியில் வெள்ளை நிற நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தார். காலை வெயில் இதமாக அடிக்க கடற்கரை மணலில் படுத்த வேதிகா சூரிய குளியல் அதாவது சன்பாத் சுகத்தை அனுபவித்தார். சாஃப்ட்டான அவரது சிவந்த நிற மேனியில் லேசாக சூர்ய கதிர்கள் படர அழகுதேவதையாக தோன்றியதை அப்படியே புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றி இருக்கிறார்.

மாலத்தீவியில் உல்லாச சுற்றுலாவில் இருந்து நடிகை ரகுல் பிரீத் தந்து பயணத்தை முடித்துக்கொண்டு ஷூட்டிங் மூடுடன் அங்கிருந்து புறப்பட்டார். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கிறார். அதேபோல் லிங்கா பட நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு மாலத்தீவின் இயற்கை அழகிலிருந்து பிரியாவிடை பெற்று மும்பை திரும்பினார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்