நயன்தாராவை தொடர்ந்து சீதை ஆகும் பிரபல நடிகை..

by Chandru, Nov 29, 2020, 09:49 AM IST

சமூக மற்றும் ஆக்‌ஷன், திகில் படங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் புராண கதைகளும் அவ்வப்போது உருவாக்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஸ்ரீராம ராஜ்யம் படம் உருவானது. ராமராக என்.டி. பாலகிருஷ்ணா நடிக்க சீதையாக நயன்தாரா நடித்தார். அதன் பிறகு 9 வருடம் கழித்து அம்மன் வேடம் ஏற்று மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார். ஒடிடி தளத்தில் தீபாவளி தினத்தை இப்படம் வெளியானது. தற்போது ரூ 500 கோடி செலவில் பிரம்மாண்டமாக ராமாயண கதை ஆதி புருஷ் என்ற பெயரில் உருவாகிறது.

இப்படத்தில் ராமர் வேடம் ஏற்கிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. புஷண்குமார் தயாரிக்க ஓம் ராவுத் இயக்குகிறார். இதில் சீதையாக நடிக்க நடிகைகள் தேர்வு நடந்து வந்தது. முன்னதாக தீபிகா படுகோன் நடிப்பதாக கூறப்பட்டது. பிறகு அவர் அதில் நடிக்கவில்லை. அடுத்து அனுஷ்கா சர்மா, கியாரா அத்வானி பெயர்கள் அடிபட்டன. தற்போது கிரித்தி சனோன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கீரித்தி சனோன் ஏற்கனவே மகேஷ்பாபுவுடன் 1: நெனொக்கடைனே, படத்தில் நடித்தவர்.

இந்தியில் கல்நாக், ராப்டா, ஸ்ட்ரீ, ஹ்வுஸ்புல்4 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கீரித்தி சனோன் சீதை வேடம் ஏற்க பிரபாஸ் ராமர் வேடம் ஏற்கிறார். இந்தி நடிகர் சயீப் அலிகான் ராவணன் வேடம் ஏற்கிறார். இப்படத்துக்காக பிரபாஸ் உடல் தோற்றத்தை ஒல்லியாக்கி வருகிறார். கீரித்தி பற்றி பட தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆதிபுருஷ் படம் அடுத்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்11ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தான் தொடங்க உள்ளது.

More Cinema News


அண்மைய செய்திகள்