ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார் நடிகர் டாப்ஸி. ஆனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன, வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன் என சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் நடிக்கச் சென்றார். அங்கும் வாய்ப்புகள் அவருக்கு எதிர்பார்த்தளவுக்கு வரவில்லை. ஒரு கட்டத்தில் இந்தி படங்களில் நடிக்க முடிவு செய்து பாலிவுட் சென்றார். அங்கு அவருக்கு வாய்ப்புகள் சராசரியாக வந்தன. கிளாமர் வேடங்களை தேர்வு செய்யாமல் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஹீரோ இல்லாமல் சோலோவாக முழுபடத்தையும் தோள்களில் தங்கும் அளவுக்கு தகுதியை வளர்த்துக் கொண்டார் டாப்ஸி. ஹீரோயின் முக்கியத்துவ கதை என்றாலும் பிரபலங்களின், வாழ்க்கை கதையென்றாலும் டாப்ஸியை தேர்வு செய்கிறார்கள். ஏற்கனவே வடநாட்டு வயதான பெண் பிரகாஷி டோமர் என்பவர் துப்பாக்கியால் சுடுவதில் திறமைசாலியாக இருந்தார். அவரது சகோதரியும் இதில் திறமைசாலி. இவர்களது வாழ்க்கை படம் சாந்த்கி ஆங்க் என்ற பெயரில் உருவானது. அதில் பிரகாஷி டோமர் வேடம் ஏற்று நடித்தார் டாப்ஸி. தர்போது ஓட்டப்பந்தய வீராங்கனை வேடம் ஏற்று புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதற்காக பயிற்சியாளர் ஒருவரை நியமைத்து அவரிடம் கடுமையாக பயிற்சி பெறுகிறார் டாப்ஸி. டாப்ஸி இனிமேல் தமிழில் நடிக்க மாட்டாரா? என்று அவரிடமே கேட்ட போது, தென்னிந்தியாவில் எனது படங்களை ரசிகர்கள் ரசித்தனர். இந்தியில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் எனது படங்களை ரசிக்கிறார்கள். எனவே வருடத்துக்கு ஒரு படமாவது தமிழ் அல்லது தெலுங்கில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்றார். டாப்ஸி தற்போது தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொரோனா தளர்வில் ஜெய்பூர் அரண்மனையில் நடந்தது.