பூவினால் மேலாடை அணிந்த சிம்பு நடிகை..

by Chandru, Nov 29, 2020, 13:19 PM IST

நடிகைகளில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அதா சர்மா. இவர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் பிரபு தேவா நடித்த சார்ளி சாப்ளின் 2 படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். லாக்டவுனில் இவர் சோஷியல் மீடியாவில் செய்த அட்டகாசம் வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். வீட்டை துடைக்கிறேன் என்று தரையில் உடற்பயிற்சி செய்தபடி துடைத்தவர் திடீரென்று கதவு கண்ணாடிகளை தலைகீழாக நின்று கால்களால் துடைத்தார்.

அதாவுக்கு நீண்ட கால்கள் என்பதால் எந்த உயரத்துக்கும் அவரது கால்கள் நீள்கின்றன. நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா, வேதிகா, ரகுல் ப்ரீத் போன்றவர்கள் வரிசையாக மாலத்தீவுக்கு சென்று விடுமுறை கொண்டாட்டம் நடத்தினார்கள். ஆனால் அதா சர்மா தனது இன்ஸ்டாபக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். இயற்கை பின்னணியில் நீர் சூழ்ந்த அந்த பகுதியை வீடியோவில் காட்டி, இது மாலத்தீவு அல்ல. தமிழ்நாடு கேரளா பார்டரில் இருக்கும் மகராஜபுரம். இந்த இடத்தில் நான் தண்ணீரில் மூழ்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த இடத்தில் வேறு ஷூட்டிங் இதற்கு முன் நடந்ததில்லை என்றார்.

உள்ளுரில் இருக்கும் சுற்றுலா தளங்களை மறந்துவிட்டு வெளிநாட்டு தீவில் உல்லாசம் காணும் நடிகைகளை நக்கலடிக்கும் வகையில் அதா சர்மா வெளியிட்டிருந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது. தற்போது மற்றொரூ சேட்டை செய்திருக்கிறார். தனது மேலாடையை பூக்களால் தயாரித்து அதை அணிந்து, நான் பூ போன்று மென்மையானவள் என்று சொல்லாமல் சொல்லி அப்படங்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் 1968ம் ஆண்டு ஆஷா போஷ்லே பாடிய கஜாராமொஹபத் வாலா என்ற புகழ்பெற்ற இந்தி பாடலை உடன் பதிவிட்டிருக்கிறார். அதா சர்மாவின் பூவால் தைத்த மேலாடைக்கு பலரும் லைக்ஸ் கொடுத்து, நீங்க ரொம்ப கவர்ச்சி மட்டுமல்ல அழகு என்று புகழ்ந்திருக்கின்றனர்.

You'r reading பூவினால் மேலாடை அணிந்த சிம்பு நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை