பிரபல ஹீரோவுக்கு பிரிட்டிஷ் கார் வாங்கித் தந்த தாயார்..

by Chandru, Nov 30, 2020, 10:31 AM IST

சின்ன வயதில் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்கள். வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு பெற்றோருக்குப் பிள்ளைகள் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். இங்கு கோடிகளில் சம்பாதிக்கும் நடிகருக்கு அவரது தாயார் கார் வாங்கி பரிசளித்திருக்கிறார்.நடிகர் சிம்பு கடந்த ஒன்றை வருடமாகப் படங்களில் நடிக்காமல் இருந்தார். கொரோனா லாக்டவுனில் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை 30 கிலோ குறைத்தார், பின்னர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படப் பிடிப்பில் கலந்து கொண்டார். எண்ணி 40 நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கடந்த காலங்களில் சிம்பு படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தன. மாநாடு படத்திற்கே ஆரம்பத்தில் அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டது. இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு அப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது.கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஈஸ்வரன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்புவிடம் புதிய மாற்றம் தென்பட்டது. சொன்ன நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்ததுடன் அடுத்து மாநாடு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு ரிஸ்க்கான சேசிங் காட்சிகளில் நடித்தார். இதில் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் அவரது நெற்றியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்தம் ஒழுகுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிம்புவின் புதிய விறுவிறுப்பு திரையுலகினரை மட்டுமல்லாமல் அவரது தாயையும் கவர்ந்தது. இந்த மாற்றத்துக்குச் சிம்புவுக்கு பரிசளிக்க விரும்பினார். பிரிட்டீஷ் ரேசிங் கிரீன் நிற மினி கூப்பார் கார் ஒன்றை வாங்கி அவருக்குப் பரிசளித்தார் தாயார் உஷா. அதைக்கண்டு சிம்பு மகிழ்ச்சி அடைந்தார். தாயின் மகிழ்ச்சியைவிட வேறு என்ன சந்தோஷம் இருந்து விட முடியும் அந்த மகிழ்ச்சியை தந்த சிம்புவுக்கு அவரது அம்மா உஷாவிடமிருந்து மட்டுமல்லாமல் ரசிகர்களிடமிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.
முன்னதாக ஈஸ்வரன் படப் பிடிப்பில் பாம்பு பிடித்தாக படக் குழு மீது புகார் எழுந்தது. இதுபற்றி வனத்துறை இயக்குனர் சுசீந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சுசீந்திரன் தகுந்த செய்முறை விளக்கம் அளித்தார்.

சிம்பு பிடித்தது ரப்பர் பாம்பு அது கிராபிக்ஸில் படமாக்கப்பட்டது என்று விளக்கினார். அதை ஏற்றுக் கொண்ட வனத்துறை அதிகாரி ஈஸ்வரன் படத்தில் சிம்பு பயன்படுத்தியது ரப்பர் பாம்பு. அதில் தவறு எதுவும் இல்லை. ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வனத்துறை அதிகாரி. இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.

You'r reading பிரபல ஹீரோவுக்கு பிரிட்டிஷ் கார் வாங்கித் தந்த தாயார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை