டிக் டிக் டிக் நடிகையின் பெயரை பச்சைகுத்திய ரசிகர்.. ஹீரோயின் ஆச்சர்யம்..

by Chandru, Nov 30, 2020, 10:45 AM IST

கோலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களது பிடித்த நட்சத்திரங்கள் படம் வெளியானால் முதல்நாள் முதல் ஷோ பார்ப்பது, கட் அவுட்டுக்கும், சிலைக்கும் பாலாபிஷேகம் செய்வது, கோவில் கூட கட்டுகிறார்கள். இப்படித் தான் ஒரு ரசிகர் நடிகையின் பெயரை தன் கையில் தமிழில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.அந்த ரசிகர் பாண்டியில் ஒரு தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகை நிவேதாவை சந்தித்தார். தன் பெயரைக் கையில் ரசிகர் பச்சை குத்திக்கொண்டதை பார்த்து நிவேதா ஆச்சர்யம் அடைந்தார். அவருடன் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

மிஸ் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட் போட்டியின் முன்னாள் வெற்றியாளரான நிவேதா பெத்துராஜ், நெல்சன் வெங்கடேசனின் ஒரு நாள் கூத்து படம் மூலம் 2016 ஆம் ஆண்டில் அறிமுகமானார். தனது முதிர்ந்த நடிப்பால் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தார். பின்னர் அவர், பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் ஹிட் படமாக அமைந்த விண்வெளி படம் டிக் டிக் டிக், மற்றும் விஜய் ஆண்டனியின் திமிர் பிடிச்சவன் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியின் சங்க தமிழன் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார்.அடுத்து பிரபுதேவாவுக்கு ஜோடியாகப் பொன் மாணிக்கவேல், மற்றும் வெங்கட் பிரபுவின் மல்டி ஸ்டார் படம் பார்ட்டி மற்றும் எஸ் எழில் இயக்கிய விஷ்ணு விஷாலின் ஜகஜலா கில்லாடி போன்ற படங்களில் நடிக்கிறார்.

நிவேதா பெத்துராஜ் தற்போது டோலிவுட்டில் கால்பதித்து அங்கும் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார், மென்டல் மாடிலோ மற்றும் ப்ரோச்சேவரேவரா போன்ற ஆஃப்பீட் படங்களிலும், அல்லி அர்ஜுனின் ஆலா வைகுந்த புரரமுலூ போன்ற பிளாக் பஸ்டர்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது ரெட் என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார், இதில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார்.

You'r reading டிக் டிக் டிக் நடிகையின் பெயரை பச்சைகுத்திய ரசிகர்.. ஹீரோயின் ஆச்சர்யம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை